ஜோக்கோவிச் உற்சாகம்

பெல்­கி­ரேட்: ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் தனது தாய்நாடான செர்­பி­யா­விற்­குத் தங்­கம் வெல்­லும் வாய்ப்­பைக் கருத்­தில்­கொள்­ளும்­போது, விளை­யாட்­ட­ரங்­கில் பார்­வை­யா­ளர்­கள் இல்­லா­தது பெரிய குறை­ அல்ல என்­கி­றார் டென்­னிஸ் நட்­சத்­தி­ரம் நோவாக் ஜோக்­வோ­விச். ஆண்­கள் டென்­னிஸ் உல­கத் தர­வ­ரி­சை­யில் முத­லி­டத்தை வகிக்­கும் ஜோக்­கோ­விச், இம்­மா­தம் விம்­பிள்­டன் பொது­வி­ரு­தைக் கைப்­பற்­றி­னார்.

அதன் பிறகு கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லின் கார­ண­மாக ஒலிம்­பிக் விளை­யாட்­டு­க­ளி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தைப் பற்றி யோசித்­தார் ஜோக்கோவிச். எனி­னும், தனது நாட்­டைப் பிர­தி­நி­திப்­ப­தில் உள்ள பெரு­மையை எண்ணிப் பங்­கேற்க முடிவெடுத்தார்.

விம்­பிள்­டன் பொது­வி­ருதை 20தாவது முறை­யாக வென்ற ஜோக்­கோ­விச், இது­வரை ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் மட்­டும்­தான் வெற்றி காண­வில்லை.

ஒலிம்­பிக் தங்­கத்­தை­யும் இந்த ஆண்டு நடை­பெ­ற­வுள்ள அமெ­ரிக்க பொது­வி­ரு­தை­யும் வென்­று­விட்­டால், ஓராண்­டில் நான்கு ஆக முக்­கி­ய­மான டென்­னிஸ் விரு­து­களை வென்ற முதல் ஆணாக விளங்­கு­வார் ஜோக்­கோ­விச்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!