திறமையை வெளிப்படுத்தத் தவறிவிட்டோம்: சௌதாம்ப்டன் அணித் தலைவர் வருத்தம்

லண்­டன்: தமது அணி இந்­தப் பரு­வத்­தில் தனது முழு­மை­யான திறனை வெளிப்­ப­டுத்­தத் தவ­றி­விட்­ட­தாக சௌதாம்ப்­டன் அணித் தலை­வர் ஜேம்ஸ் வார்ட் புரோஸ் வருத்­தத்­து­டன் குறிப்­பிட்டு உள்­ளார்.

சனிக்­கி­ழமை நடை­பெற்ற பிரி­மி­யர் லீக் ஆட்­டத்­தில் ஃபுல்ஹா­மி­டம் 2-0 என்­னும் கோல் கணக்­கில் சௌதாம்ப்­டன் வீழ்ந்­தது. அத­னைத் தொடர்ந்து பிரி­மி­யர் லீக் போட்­டி­க­ளி­லி­ருந்து அது வெளி­யே­றி­யது. இரண்­டாம் நிலை போட்­டி­களில் இனி அது விளை­யா­டும். 36 போட்­டி­களில் விளை­யாடி 24 புள்­ளி­களை மட்­டுமே பெற்­றி­ருக்­கும் சௌதாம்ப்­டன் பட்­டி­ய­லின் கடை­சி­யில் இருக்­கிறது.

போட்டி முடிந்த பின்­னர் பேசிய வார்ட் புரோஸ், “தோற்­றது ஏமாற்­றம் அளிக்­கிறது. கடி­ன­மான சூழ்­நி­லை­களில் போரா­டி­னோம் என்­பதை அறி­வோம். இருப்­பி­னும் நாங்­கள் இன்­னும் சிறப்­பாக விளை­யாடி இருக்க வேண்­டும்.

“எப்­போ­தும் ஒரே மாதி­ரி­யான திற­மை­களை நாங்­கள் வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை. எங்­க­ளது தரம் குறைந்­து­விட்­ட­தால் வர­வேண்­டிய இடத்­திற்கு வந்­து­விட்­டோம்,” என்­றார்.

சௌதாம்ப்­டன் அண்­மைய கால­மாக பெரி­தாக எத­னை­யும் சாதிக்­க­வில்லை. மாறாக, அதன் வீழ்ச்சி தொடர்ந்­து­கொண்டே சென்­றது. அணி­யின் நிர்­வா­கி­களும் நீடித்து நிலைக்­க­வில்லை. நேதன் ஜோன்ஸ், ரால்ஃப் ஹேசன்­ஹுட்டி ஆகி­யோர் அடுத்­த­டுத்து நீக்­கப்­பட்ட பின்­னர் இந்தப் பருவத்தின் மூன்றாவது நிர்வாகி தற்போதைய ரூபன் செல்லெஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!