பள்ளித்தேர்வில் கேள்வியாக வந்த கோஹ்லி!

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டும் ஒரு சமயம் போலத்தான்!  அதனால், தேசிய அணியில் இடம்பெற்று, சிறந்து விளங்கும் இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குப் பேரும் புகழும் பணமும் கொட்டோ கொட்டென்று கொட்டுவது உறுதி.

அதுவும் இப்போதைய காலகட்டத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டாளர்களில் ஒருவராகத் திகழும் விராத் கோஹ்லி போன்றவர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.

அனைத்துலகப் போட்டிகளில் 25,000 ஓட்டங்களுக்கு மேலும் 75 சதங்களையும் அடித்துள்ள கோஹ்லிக்கு உலக அளவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாளில் விராத் கோஹ்லியின் படத்தைப் போட்டு, அதனைப் பற்றி 100-120 சொற்களில் விளக்கி எழுதுமாறு வினா கேட்கப்பட்டுள்ளது.

அனைத்துலகப் போட்டிகளில் கோஹ்லி தமது 71வது சதத்தை அடித்தபின், மட்டையை உயர்த்தி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியே அப்படம். 2022ஆம் ஆண்டு நடந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் தமது 71வது சதத்தை அடித்திருந்தார்.

கோஹ்லி, கேள்வியாக இடம்பெற்ற வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவலாகி, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதிலும் டுவிட்டர்வாசி ஒருவர், தான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது ஏன் இத்தகைய கேள்விகளெல்லாம் கேட்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!