You are here

விளையாட்டு

ஓய்வுபெற்றார் சர்தார் சிங்

புதுடெல்லி: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவரான சர்தார் சிங், அனைத்துலக ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் போதுமான போட்டிகளில் விளையாடிவிட்டதாகக் கூறிய சர்தார், இளம் வீரர்களுக்கு வழிவிட இதுவே சரியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். 32 வயதான அவர் 350க்கும் அதிகமான ஆட்டங்களில் இந்தியாவைப் பிரதிநிதித்து உள்ளார். 2008 முதல் 2016 வரை எட்டு ஆண்டுகளுக்கு அணித்தலைவராகவும் இருந்துள்ளார். 2008ல் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் ஆகக் குறைந்த வயதில் தலைவர் பொறுப்பேற்றவர் எனும் பெருமையைப் பெற்றார்.

வாய்ப்பை நிராகரித்த டெரி

லண்டன்: இங்கிலாந்து, செல்சி காற்பந்துக் குழுக்களின் முன்னாள் தலைவரான ஜான் டெரி, 37, ரஷ்யக் குழுவான ஸ்பார்ட்டக் மாஸ்கோவுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். டெரி அண்மையில் ஸ்பார்ட்டக் குழுவின் மருத்துவச் சோதனையில் பங்கேற்றதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்தன. அவருக்கு 3 மில்லியன் பவுண்டு வழங்க அக்குழு தயாராக இருந்ததாகக் கூறப் பட்டது. இந்த நிலையில், குடும்பத்தைக் காரணம் காட்டி ஸ்பார்ட்டக்கில் சேர அவர் மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

விளையாட்டு வீரரின் இறப்பு ஓர் அசம்பாவிதமே

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியன்று நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்ற பிரிட்டிஷ் நாட்டவரான 42 வயது திரு ஸ்டீவன் பெக்லி, 1.5 கிலோமீட்டர் நீச்சல் பந்தயத்தின்போது உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மரணம் ஓர் அசம்பாவிதம் என்று மரண விசாரணை அதிகாரி திருவாட்டி கமலா பொன்னம்பலம் நேற்று உறுதி செய்தார். மூவர் அடங்கிய குழு இப்போட்டியில் பங்கேற்க வேண்டியிருந்த நிலையில் திரு பெக்லி கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் பின் அவரின் உடல் அசைவற்ற நிலையில் நீரிலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தோற்றாலும் இந்தியாவுக்கு முதலிடம்

துபாய்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4=1 என இழந்தபோதும் அனைத் துலக டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக் கிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4=1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து 97 புள்ளிகளு டன் 5வது இடத்தில் இருந்தது. தற்போது அனைத்துலக கிரிக் கெட் மன்றம் டெஸ்ட் (ஐசிசி) அணி மற்றும் வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட் டுள்ளது.

எஃப்1: இழந்த வெற்றியை மீட்க வெட்டல் ஆர்வம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஈராண்டு களுக்கு முன்னர் பறிகொடுத்த வெற்றியை மீட்டெடுக்கும் துடிப் பில் இருக்கிறார் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல். சிங்கப்பூரின் இரவு நேர கார் பந்தயம் 11வது ஆண்டாக இவ் வாரம் தொடங்குகிறது. ஞாயிற்றுக் கிழமை இறுதிச்சுற்று நடைபெறும். இதுவரை இங்கு வெட்டல் நான்கு முறையும் பிரிட்டிஷ் வீரர் லூயிஸ் ஹேமில்டன் மூன்று முறையும் வென்று உள்ளனர். வெட்டல் ஆகக் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு வாகை சூடினார்.

சீறிப் பாய்ந்த போர்ச்சுகல்; பதுங்கிய இத்தாலி

லிஸ்பன்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இத்தாலியை 1=0 எனும் கோல் கணக்கில் வீழ்த் தியது போர்ச்சுகல். அணித் தலைவர் கிறிஸ்டி யானோ ரொனால்டோ களமிறங் காத போதிலும் போர்ச்சுகல் அதிரடியாக விளையாடியது. போர்ச்சுகலின் தொடர் தாக்கு தல்களைச் சமாளிக்க முடியாமல் இத்தாலி வீரர்கள் திக்குமுக் காடினர். இந்த ஆட்டத்திற்காகத் தமது குழுவில் பல மாற்றங்களைச் செய்திருந்தார் இத்தாலியின் பயிற்றுவிப்பாளர் ரொபெர்ட்டோ மன்சினி. போர்ச்சுகலின் நட்சத்திரப் பட்டாளம் வெளிப்படுத்திய மின்னல் வேக ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் இத்தாலியின் இளம் வீரர்கள் தவித்தனர்.

ஃபிஜியை வீழ்த்திய ஃபாண்டியின் படை

நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் ஃபிஜிக்கு எதிராக சிங்கப்பூர் நேற்றிரவு களமிறங்கியது. இந்த ஆட்டம் பீஷான் விளையாட்டரங் கத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் சிங்கப்பூருக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் வந்த பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பினார் சிங்கப்பூரின் அணித் தலைவர் ஹாரிஸ் ஹருண். விளையாட்டரங்கத்தில் கூடியி ருந்த ரசிகர்களின் கொண்டாட்டம் தணிவதற்குள் அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள் சிங்கப்பூரின் இரண்டாவது கோல் புகுந்தது.

ஆஸ்திரேலியாவில் வெல்ல மனநிலை முக்கியம் - கில்கிறிஸ்ட்

மெல்பர்ன்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரை வெல்ல உடல்நிலையை விட மனநிலை முக்கியமானது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட்காப்பாளர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உள்ளூர் தொடரைச் சிறப்பாக முடித்துக்கொண்டு தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தது. இந்த இரண் டிலும் தொடர்களை இழந்து உள்ளது. விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி வெளி நாட்டு மண்ணில் சாதிக்க அதிக அளவில் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் இரண் டில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இன்னும் ஆஸ்தி ரேலியத் தொடர் மட்டுமே மீதம் உள்ளது.

பத்து ஆட்டங்களுக்குப் பின் கோலடித்த ஜிரூ; நெதர்லாந்தை வீழ்த்தியது பிரான்ஸ்

பாரிஸ்: அண்மையில் ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டி களில் வெற்றி மகுடம் சூடிய பிரான்ஸ் காற்பந்து அணியில் இடம்பெற்றிருந்தபோதும் அந்தத் தொடரில் ஒரு கோல்கூட போடாத தால் பெரும் ஏமாற்றமடைந்தார் தாக்குதல் வீரரான ஒலிவியே ஜிரூ. அனைத்துலக அளவில் கடை சியாகத் தான் ஆடிய பத்து ஆட் டங்களில் ஜிரூ ஒரு கோல்கூட அடிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் நெதர்லாந்து அணிக்கு எதிரான நேஷன்ஸ் கிண்ணப் போட்டியில் அற்புதமான கோலை அடித்ததன் மூலம் ஒரு வழியாக அவரது கோல் ஏக்கம் தீர்ந்தது.

‘ஃபெடரருக்கும் நடாலுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்’

நியூயார்க்: டென்னிஸ் விளையாட்டில் உலகின் முன்னாள் முதல்நிலை ஆட் டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச், 31, அமெரிக்கப் பொது விருதை மூன்றாவது முறை யாகக் கைப்பற்றியுள்ளார். எட்டாவது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்த ஜோக்கோவிச் 6-3, 7-6, 6-3 என நேர் செட்களில் அர்ஜெண்டினா வீரர் யுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வெற்றி கொண்டார். 2009ல் அமெரிக்க ஓப்பன் பட்டம் வென்ற டெல் போட்ரோ, கிராண்ட் ஸ்லாம் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்கு முன் னேறியது இதுவே இரண்டாவது முறை. இதையடுத்து, ஜோக்கோவிச் வென்றுள்ள கிராண்ட் ஸ்லாம் பட்டங் களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது.

Pages