குஜராத்தில் பாஜக சாதனை வெற்றி: 7வது முறை ஆட்சியைப் பிடித்தது

குஜ­ராத் சட்­டப் பேர­வைத் தேர்­த­லில் பாஜக சாதனை வெற்­றி­பெற்று 7வது முறை­யாக ஆட்­சி­யைத் தக்க­ வைத்­துக்கொண்­டுள்­ளது. 1995ஆம் ஆண்டு தொடங்கி 27 ஆண்­டு­க­ளாக குஜ­ராத் மாநி­லத்­தில் பாஜக ஆட்­சி­தான் நடை­பெற்று வரு­கிறது. இந்த வெற்­றி­யின் மூலம் மேலும் ஐந்­தாண்­டு­க­ளுக்கு அந்த மாநி­லத்தை ஆட்சி செய்­வ­தன் மூலம் 32 ஆண்டு கால ஆட்­சி­யாக பாஜக ஆட்சி விளங்­கும். முதல்­வர் பூபேந்­திர படேல், 60, புதிய அர­சாங்­கத்­தி­லும் முதல்­வ­ரா­கத் தொடர்­வார் என்று ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. வரும் திங்­கட்­கி­ழமை (டிசம்­பர் 12) புதிய அர­சாங்­கம் பதவி ஏற்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பிர­த­மர் மோடி மீது குஜ­ராத் மக்­கள் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்கை மீண்­டும் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது என்று பூபேந்­திர படேல் நேற்று பிற்­ப­க­லில் கூறி­னார்.

மொத்­தம் 182 சட்­டப் பேர­வைத் தொகு­தி­க­ளுக்கான வாக்­கு­களை எண்­ணும் பணி நேற்­றுக் காலை 8 மணிக்­குத் தொடங்­கி­யது. தொடக்­கம் முதலே பாஜக முன்­னி­லை­யில் இருந்து வந்­தது.

பிற்­ப­கல் 1 மணி நில­வ­ரப்­படி 53.33% வாக்­கு­களை பாஜக பெற்று அசைக்க முடி­யாத இடத்­தைப் பிடித்­தது. அதற்கு அடுத்த நிலை­யில் 26.9 விழுக்­காடு வாக்­கு­க­ளு­டன் காங்­கி­ரஸ் கட்சி இரண்­டாம் இடத்­தி­லும் பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட ஆம் ஆத்மி 12 விழுக்­காடு வாக்கு­ க­ளைப் பெற்று மூன்­றாம் இடத்­தி­லும் இருந்­தன.

ஆட்சி அமைக்க 92 தொகு­தி­களில் வெல்ல வேண்­டிய நிலை­யில் பாஜக 155 தொகு­தி­க­ளுக்கு மேல் முன்­னி­லை­யில் இருந்­தது. 150 தொகு­தி­க­ளுக்கு மேல் அக்­கட்சி வெற்­றி­பெற்­றால் அது சாதனை ஆகும். இதற்கு முன்­னர், 1985ஆம் ஆண்டு 149 தொகு­தி­களில் காங்­கி­ரஸ் வென்­றதே குஜ­ராத்­தில் இது­வரை சாத­னை­யாக இருந்து வந்­துள்­ளது. பாஜக அதி­க­பட்­ச­மாக 127 இடங்­களில் (2002 தேர்­தல்) வென்­றுள்­ளது.

குஜ­ராத் மாநி­லம் முழு­வ­தும் நேற்று பாஜ­க­வி­னர் வெற்­றிக் கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். 2017 தேர்­த­லில் பாஜக 99 இடங்­க­ளி­லும் காங்­கி­ரஸ் 77 இடங்­க­ளி­லும் வெற்றி பெற்­றி­ருந்­தன.

சிறிய வட­மா­நி­ல­மான இமா­ச­லப் பிர­தே­சத்­தில் ஆட்சி மாறும் வர­லாறு இப்­போ­தும் மாற­வில்லை. கடந்த 40 ஆண்­டு­க­ளாக, ஆளும் கட்­சி­யாக இருக்­கும் எந்­த­வொரு கட்­சி­யும் அடுத்து நடை­பெ­றும் சட்­டப் பேரவை தேர்­த­லில் வெற்­றி­பெற்­ற­தில்லை. அந்த வகை­யில், இது­வரை இமா­ச­லப் பிர­தே­சத்­தில் ஆளும் கட்­சி­யாக இருந்த பாஜக இப்­போது தோல்­வி­ய­டைந்­து­விட்­டது. காங்­கி­ரஸ் கட்­சிக்கு அறு­திப் பெரும்­பான்மை கிடைக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. 68 தொகு­தி­களில் 39ல் காங்­கி­ர­சும் 26ல் பாஜ­க­வும் முன்­னி­லை­யில் இருந்­தன. 2017 தேர்­த­லில் 44 இடங்­களில் வென்று பாஜக ஆட்­சி­யைப் பிடித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!