விலங்கு

ஒசாகா: ஜப்பானில் உள்ள விலங்கியல் தோட்டம் ஒன்றில் ஆண் என நினைக்கப்பட்ட 12 வயது நீர்யானை பெண் எனத் தெரியவந்துள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில விவசாயிகள் பயிரிட்டுள்ள பருத்தி, நெற்பயிர், பழங்கள், காய்கறிகளை குரங்குகள் கூட்டம் நாசப்படுத்தி வருவதால் மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
வியேந்தியேன்: லாவோஸ் தலைநகர் வியேந்தியேனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 16 கரடிக் குட்டிகளை விலங்குப் பராமரிப்பு அறநிறுவனம் மீட்டுள்ளது.
பறவைப் பாரடைஸ், நைட் சஃபாரி, ரிவர் வொன்டர்ஸ், சிங்கப்பூர் விலங்குகாட்சிசாலை ஆகிய சிங்கப்பூரின் நான்கு வனவிலங்குப் பூங்காக்களில் 2023ஆம் ஆண்டு 128 பல்வேறு இனங்களைச் சேர்ந்த 970 விலங்குகள் பிறந்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் ஆக அதிகமானது என்று மண்டாய் வனவிலங்கு குழுமம் தெரிவித்துள்ளது.
ஒடிசா: வன அதிகாரிகளின் அனுமதியின்றி வனவிலங்குகளுடன் செல்ஃபி அல்லது புகைப்படம் எடுத்துக்கொள்பவர்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறை அனுபவிக்க நேரிடும் என்று ஒடிசாவின் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சுஷாந்த் நந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.