தமிழ்நாடு

சென்னை: தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க கூடுதலாக 2 ரேடார்கள் அமைக்கப்படும் என மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும்.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 1.90 கோடி பேர் (10.9 மில்லியன்) வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) கோலாகலமாகத் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக வைகை அணையில் இருந்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய அளவிலான ஜனநாயகத் தேர்தல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) தொடங்கியது. ஏழு கட்டங்களாக ஆறு வாரங்கள் நடைபெற உள்ள இந்தியத் தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பில் தமிழ்நாட்டு மக்கள் உட்பட பல மாநிலத்தவர்கள் வாக்களித்தனர்.