மீனவர்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை அந்நாடு உடனடியாக விடுதலை செய்துள்ளது.

அந்த 22 மீனவர்களும் சனிக்கிழமை அன்று கைதாகினர். இதையடுத்து, தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், ராமேசுவரம் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மீனவர்களின் உறவினர்கள் சந்தித்துப் பேசினர்.

அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 22 மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் நாட்டுப் படகுகள் மூலம் ராமேசுவரத்துக்கு அழைத்து வரப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, 22 மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனம் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்குத் திசையில் நகர்ந்தது.
கராச்சி: மருத்துவக் குணங்கள் நிறைந்த அரிய வகை மீனை விற்று, ஒரே நாளில் பணக்காரரானார் பாகிஸ்தான் மீனவர் ஒருவர்.
கொரோனா கிருமிப்பரவல் காரணமாக அனைத்துலக போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஈரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ...
ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை தாயகத்துக்கு அழைத்து வர சிறப்பு கப்பல் ஒன்று அனுப்பப்படுவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ...