உளவு

தைப்பே: தைவான் நாட்டு வான்வெளியில் மூன்று சீன பலூன்கள் காணப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சு செவ்வாய்க்கிழமை  கூறியது. இதுபோன்று, சென்ற மாதமும் இத்தகைய பலூன்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
பெட்டாலிங் ஜெயா: நார்வேயில் வேவு பார்த்ததாக நம்பப்படும் மலேசியர், ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருந்தபோது வெளிநாட்டவர் ஒருவரால் நியமிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ: ரஷ்யா அண்மைய ஆண்டுகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உளவுத்துறை அதிகாரிகளைச் செயலிழக்கச் செய்துள்ளதாக அந்நாட்டின் முன்னணி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஓஸ்லோ: வேவு பார்த்ததாக 25 வயது மலேசிய மாணவரை நார்வே கைது செய்துள்ளது. பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அவர் ஒட்டுக்கேட்டதாகவும் நார்வே ஊடகம் தெரிவித்தது.
லாஸ் ஏஞ்சலிஸ்: சீனாவுக்காக உளவுபார்த்த சந்தேகத்தின்பேரில் அமெரிக்க கடற்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க நீதித் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.