நாடாளுமன்றம்

புதுடெல்லி: பெரிய பொருளியலைக் கொண்டுள்ள நாடுகளைப் பொறுத்தமட்டில், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியா கடைசி இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அரக்கோணம்: தமிழகத்தின் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
போபால்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர் ஒருவர் உயிரிழந்ததால் அவர் போட்டியிட்ட தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புவிசார் அரசியல் மோதல்கள் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய அல்லது உணர்ச்சிபூர்வமான தலைப்புகள் நற்குணமும் குடியியல் கல்வியும் (சிசிஇ) பாடங்களில் சேர்க்கப்படலாம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஏப்ரல் 2 அன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் 35 விழுக்காடு அதிகரித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டு வாடகை 2023ஆம் ஆண்டில் நிலைப்பட்டது என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தார்.