குடிநுழைவு

செப்பாங்: மலேசியாவுக்கு டிசம்பரில் கூடுதல் பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 14 குடிநுழைவு முகப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பள்ளி விடுமுறை விரைவில் தொடங்கவிருப்பதால் உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரு சோதனைச் சாவடிகளிலும் அதிக போக்குவரத்தை எதிர்பார்க்கும்படி சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் புதன்கிழமை (நவம்.16) கூறியது. இந்த நெரிசலை 16 நவம்பர் வியாழக்கிழமை முதல் விடுமுறைக் காலமான 2024 ஜனவரி 2 வரை எதிர்பார்க்கலாம் என்றும் ஐசிஏ தெரிவித்தது.
சிங்கப்பூர், நவீன குடிநுழைவுச் சோதனை முறையைப் பரிசீலித்து வருகிறது.
வருகின்ற தீபாவளி விடுமுறையில் உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரண்டு சோதனைச் சாவடிகளிலும் அதிக போக்குவரத்து இருக்கலாம் என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) திங்கட்கிழமை எச்சரித்தது.
அகமதாபாத்: கடந்த 2022 அக்டோபர் முதல் இவ்வாண்டு செப்டம்பர்வரை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறி, 96,917 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்கச் சுங்க, எல்லைப் பாதுகாப்புத் துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.