தொகுதிப் பங்கீடு:  திமுக, காங்கிரஸ் பேச்சு

சென்னை: திமுக, காங்கிரஸ் இடையேயான தேர்தல் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், தொகுதி உடன்பாடும் இறுதிக்கட் டத்தை நெருங்கி உள்ளது.
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமை டெல்லிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், அதை வைத்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் தீவிர ஆலோச னையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதி களை ஒதுக்க முடியும் என திமுக தலைமை திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளது. எனினும் காங்கிரஸ் தரப்பில் குறைந்த பட்சம் 12 தொகுதிகள் கேட்பதாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளை திமுக தலைமை அடையாளம் கண்டுள்ளது. இதையடுத்து தொகுதிகள் குறித்த பட்டியலை தயாரித்து அதை திமுக மகளிரணி செயலர் கனிமொழி, முதன்மைச் செயலர் டி.ஆர்.பாலு ஆகியோரிடம் கொடுத்து அனுப்பியுள்ளது அக் கட்சித் தலைமை.
 

Loading...
Load next