பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிக்கு உதவிய எம்எல்ஏ

1 mins read
a672e782-8dcf-4d14-9fb9-f686f8d41dd6
பழைய பண நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்துக்கொண்டிருந்த மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய எம்எல்ஏ நந்தகுமார், படம்: ஊடகம் -

வேலூர்: பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்து வந்த மூதாட்டிக்கு அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரூ.12,000 பண உதவியும் காசநோய்க்குச் சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

மூதாட்டி புவனேஸ்வரி வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர். இவர் ரூ.12,000 மதிப்பில் செல்லாத பழைய ரூ.500 நோட்டுகளை மாற்றித் தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்குத் தள்ளாடியபடி வந்துள்ளார். வாடகை வீட்டில் தங்கி கூலி வேலைக்குச் சென்று சிறுகச் சிறுக ரூ.12,000 பணம் சேர்த்து வைத்திருக் கிறேன். பணம் செல்லாது என அறிவித்தது பற்றி எனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.