சுடச் சுடச் செய்திகள்

‘ரூ.40,000 கோடியில் ஆலை’

சென்னை: நன்கு படித்துவிட்டு, படிப்புக்கேற்ற சரியான வேலை கிடைக்காமல் திண்டாடி வரும்  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு களை அதிகரித்து வழங்கும்  வகையில் தென்மாவட்டங்களில் ஆறு புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. 

அத்துடன் துறைமுக நகரான தூத்துக்குடியில் ‘அல்கெராபி’ என்னும் நிறுவனம் ரூ.40,000 கோடி செலவில் புதிதாக எண்ணெய் சுத்தி கரிப்பு ஆலை ஒன்றை அமைக்க உள்ளது.   

இதேபோல் சீனாவைச் சேர்ந்த வின்டெக் என்ற நிறுவனமும் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் மின்சாரக் கார்கள்           தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது. 

இந்த திட்டங்கள் அனைத்துக்கு மான ஒப்புதலை தமிழக அமைச்ச ரவை நேற்று முன்தினம் வழங்கியது.

மேலும், தமிழகத்தில் இயங்கி வரும் சில தொழிற்சாலைகளின் விரிவாக்கத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் முக்கிய மான பிரச்சி்னைகள் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க அவ்வப் போது அமைச்சரவை கூடு வது வழக்கம்.

அதன்படி 2020ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலை மையில் தலைமைச் செயலகத்தில் நேற்று  முன்தினம் மாலை நடந்தது. 

இந்தக் கூட்டத்தில் அரசின் முக்கியமான கொள்கை முடிவுகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வருகிற மார்ச் மாத தொடக்கத் தில் சட்டசபையில் தமிழக அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கை  (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதிமுக தலைமை யிலான இந்த ஆட்சியின் கடைசி முழு வரவு செலவுத் திட்டமாக இந்த பட்ஜெட் இருக்கும்.

அடுத்த ஆண்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால் பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. அந்த திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் அமைச் சரவைக் கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon