தமிழகத்தில் கொரோனா ஒழிய 8 கி.மீ. ‘கேடயம்’ அமைகிறது

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று இரண்­டா­வது கட்­டத்தை எட்­டும் நிலை­யில், அங்கு மொத்­தம் 42 பேரைக் கிரு­மி­கள் தொற்றி இருக்­கின்­றன.

அவர்­கள் 24 மணி நேர­மும் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். இந்த நிலை­யில் கொரோனா கிரு­மிப் பர­வு­வ­தைத் தடுக்க புதிய உத்தி­க­ளு­டன் அர­சாங்­கம் தீவிரமாகக் களத்­தில் குதித்­தது.

வெளி மாநி­லங்­களில் இருந்­தும் வெளி­நா­டு­களில் இருந்­தும் வந்த 209,284 பேர் பரி­சோ­திக்­கப்­பட்டு உள்­ள­னர். அவர்களில் மொத்­தம் 43,537 பேர் மருத்­து­வத் துறை­யின் நேரடி கண்­கா­ணிப்­பில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். 227 பேர் தனி­மைப்படுத்­தப்­பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்­கப்பட்டு வரு­கிறது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த 15,000க்கும் மேற்­பட்­ட­வர்­களும் குடி­யு­ரிமை ஆணை­யத்­தில் இருந்து பெறப்­பட்ட தக­வ­லின் அடிப்­ப­டை­யில் 85,000 பேருக்­கும் மேற்­பட்டோர் இப்­போது வீட்­டுக் கண்­கா­ணிப்­பின் கீழ் உள்­ள­னர்.

13,323 தனி படுக்­கை­களும் 3,044 செயற்கை சுவா­சச் சாத­னங்­களும் தயா­ராக இருக்கின்றன.

சிகிச்சை முடிந்து இரண்டு பேர் குண­ம­டைந்து வீடு திரும்பி இருக் கிறார்­கள். கிரு­மித்­தொற்று இருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கப்­படும் 208 பேரின் ரத்­தப் பரி­சோ­த­னை­கள் முடிவு இனி­மேல்­தான் தெரி­ய­வ­ரும்.

இந்த நிலை­யில், கொரோனா கிரு­மியை ஒழிக்­கும் முயற்­சி­களில் மேலும் ஒன்­றாக, கிரு­மித்­தொற்று இருப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்ட நோயா­ளி­க­ளின் வீடு­க­ளைச் சுற்­றி­லும் உள்ள 8 கி.மீ. வட்­டா­ரத்­திற்­குள் வசிப்­ப­வர்­கள் தனி­மைப்­படுத்­தப்­ப­டு­வர் என்று மக்­கள் நல்­வாழ்வு மற்­றும் குடும்ப நல்­வாழ்­வுத் துறை நேற்று அறி­வித்­தது.

கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்ட மக்­கள் வசிக்­கும் சென்னை, ஈரோடு, கோவை உள்­ளிட்ட 13 மாவட்­டங்­க­ளி­லும் இப்­பு­திய நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­வ­தாக அந்­தத் துறை தெரி­வித்­தது.

கிருமித்தொற்று உள்ள ஒரு­வர் வசிக்­கும் வீட்­டைச் சூழ்ந்­துள்ள 8 கி.மீ. பரப்­ப­ளவுப் பகு­தி­களில் கிருமி­கள் பர­வா­மல் பாது­காப்­புக் கேட­யத்தை உரு­வாக்­கும் முயற்­சி­யாக அந்­தப் பகு­தி­கள் தனி­மைப்­படுத்­தப்படு­கின்­றன என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

அப்­ப­கு­தி­களில் 50 வீடு­க­ளுக்கு ஓர் அதி­காரி என்ற முறை­யில் வீடு வீடா­கச் சென்று நோய்த்­தொற்று கண்­ட­றி­யும் பணி நடக்கும்.

அத்­த­கைய அதி­கா­ரி­கள் நான்கு பேருக்கு ஒரு கண்­கா­ணிப்பு அலு­வ­லர் இருப்­பார்.

இரு­மல், காய்ச்­சல், மூச்­சுத் திண­றல் யாருக்­கா­வது இருந்­தால் அவர்­கள் உட­ன­டி­யாக மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். வய­தா­ன­வர்­க­ளின் விவ­ரங்­களும் சேக­ரிக்­கப்­படும்.

கொரோனா கிருமித்தொற்று ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்து அதி­கம் உள்ள பிரி­வி­னர் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­கள் மீது தனிக் கவ­னம் செலுத்­தப்­படும். முதி­யோர், கர்ப்­பிணி­கள், நீரி­ழிவு, ரத்த அழுத்த நோய் உள்­ள­வர்­கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்­த­வர்­கள் அனை­வ­ரும் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­ப­டு­வர் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இத­னி­டையே, தமி­ழக அரசு கொவிட்-19 தொடர்­பில் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளை­யும் புதுப்­புது தக­வல்­க­ளை­யும் தெரி­விக்க ஏது­வாக வாட்ஸ்­அப் சாட்­பாக்ஸ் ஒன்­றைத் தொடங்­கி­யது. மக்­கள் 9035766766 என்ற எண் மூலம் விவ­ரம் அறி­ய­லாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!