மதுரையில் தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

மதுரை: மதுரை மாநகரில் கொரோனா பாதிப்பு 3,403 ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்று மூவர் உயிரிழந்தனர். இவர்களுடன் கிருமித் தொற்றால் 44 பேர் இறந்துள்ளனர். 887 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“சென்னையில் வசித்து வந்த பலரும் தற்போது மது ரைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக கிருமித்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதி கரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலான பணிகளை மதுரை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. சென்னையைப் போன்று மதுரையிலும் மக்கள் தொகை அதிகம் உள்ளதால் பரவல் இங்கு அதிகமாக உள்ளது,” என்று கொரோனா தடுப்புச் சிறப்பு அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.