80 அடியில் வரையப்பட்ட மகாத்மா காந்தி ஓவியம்

சென்னை சென்ட்­ரல் மூா்மாா்க்கெட் வளா­கத்­தின் புற­நகா் ரயில் நிலை­யக் கட்­ட­டத்­தில் 80 அடி உய­ரத்­தில் இந்­தி­யத் தந்தை மகாத்மா காந்­தி­ய­டி­க­ளின் ஓவி­யம் வரை­யப்­பட்­டுள்­ளது.

இந்த பிரம்­மாண்ட ஓவி­யம் ரயில்வே ஊழி­யா்­கள், பய­ணி­கள் உள்­பட அனை­வ­ரை­யும் கவா்ந்து வரு­கிறது.

மகாத்மா காந்­தி­யின் 151வது பிறந்­த­நாள் விழாவை நினைவு கூரும் வித­மாக, நேற்று முன்­தினம் இந்த அழ­கிய ஓவி­யம் பொது­மக்­க­ளின் பாா்வைக்குத் திறந்து வைக்­கப்­பட்­டது.

இது­கு­றித்து சென்னை ரயில்வே கோட்ட அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், “இந்­திய ரயில்வே யுடன் மகாத்மா காந்­தி­ய­டி­கள் கொண்­டி­ருந்த தொடா்பு மிக­வும் நெருக்­க­மா­னது.

“காந்­தி­ய­டி­கள் மேற்­கொண்ட ரயில் பயண நிகழ்வு ஒன்றை சுவா் ஓவி­ய­மா­கத் தீட்ட சென்னை ரயில்வே கோட்­டம் திட்­ட­மிட்­டது.

“அதன்­படி, சென்னை மூா்மாா்க்கெட் வளா­கக் கட்­ட­டத்­தின் கிழக்­குப் பகுதி சுவ­ரில் இந்த 80 அடி உய­ர­முள்ள காந்­தி­யின் அழ­கிய பிரம்­மாண்ட ஓவி­யம் வரை­யப்­பட்­டது. இந்த சுவா் ஓவி­யம் பெரிய வகை பாரந்தூக்கியின் உத­வி­யோடு எட்டு நாட்களுக்­குள் வரைந்து முடிக்­கப்­பட்­டது. இந்த ஓவி­யத்தை முதன்­மு­த­லில் உரு­வாக்­கி­யவா் தெற்கு ரயில்­வே­யில் பணி­பு­ரிந்து ஓய்வு பெற்­றுள்ள ஓவியா் சங்­க­ர­லிங்­கம் ஆவாா்,” என்­றனா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!