முதல்வர்: புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை

உரிய நேரத்­தில் உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­ட­தால் புய­லால் தமி­ழ­கம் அதிக அளவு பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று முதல்­வர் பழ­னி­சாமி கூறி­யுள்­ளார்.

“புயல் வீசப் போகிறது என இந்­திய வானிலை ஆராய்ச்சி மையம் அறி­வித்­த­தும் புய­லால் பாதிக்­கும் மக்­க­ளுக்கு எடுக்க வேண்­டிய முன்­னெச்­செ­ரிக்கை நட­வ­டிக்கைகள் குறித்து அறி­வுரை வழங்­கி­யி­ருந்­தோம். கட­லுார் மாவட்­டத்­தில் அதி­க­ளவு சேத­மா­கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறி­யி­ருந்­த­தால் மாவட்ட ஆட்­சி­யரை தலை­மைச் செய­ல­ரும் நானும் அடிக்­கடி தொடர்புகொண்டு பேசி­னோம். அமைச்­சர், எம்­எல்­ஏக்­கள், எஸ்.பி ஆகி­யோ­ரை­யும் தொடர்புகொண்டு உரிய நட­வ­டிக்­கை­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னோம்.

“வரு­வாய்த் துறை அமைச்­சர் உத­ய­கு­மா­ரும் சென்னை எழி­ல­கத்­தில் தங்கி, கட்­டுப்­பாட்டு அறை அமைத்து, புயல் தொடர்­பாக வெளி­யில் இருந்து வரும் செய்­தி­களை வாங்கி எனக்கு தெரி­வித்து உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. அனைத்து முன்­னெச்­ச­ரிக்­கை­களும் சரி­யான முறை­யில் எடுக்­கப்­பட்­ட­தால் ‘நிவர்’ புய­லால் பெரி­ய­ள­வில் பாதிப்­பில்லை,” என்று முதல்­வர் குறிப்­பிட்­டார்.

கட­லுார் ஊராட்சி ஒன்­றிய அலு­வ­ல­கத்­தில் நடந்த ஆய்­வுக் கூட்­டத்­திற்கு பிறகு அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

தமி­ழ­கம் முழு­வதும், புய­லால் பாதிக்­கப்பட்ட மக்­களை தங்க வைக்க 4,133 முகாம்­கள் தயார் செய்­யப்­பட்­டன. அவற்­றில் 13 லட்­சம் பேரை தங்க வைக்க திட்­ட­மிடப்பட்­டது. ஆனால், 2,991 முகாம்­களில் 2.30 லட்­சம் பேர் மட்­டுமே தங்க வைக்கப்­பட்­ட­னர்.

புய­லால் வாழை, மர­வள்ளி பயிர்­கள் சேதம் அடைந்­துள்­ளன. மாவட்ட நிர்­வா­கம் முழு­மை­யாக கணக்­கெ­டுக்­க­வில்லை. அந்த பணி முடிந்­தால் முழு­ விவரம் தெரி­யும்.

இதே­போல், மற்ற மாவட்­டங்­களில் பாதிப்பு குறித்து கணக் ­கெ­டுத்து, விவ­சா­யி­க­ளுக்கு நிவா­ர­ணத் தொகை வழங்­கப்­படும். மேலும், பயிர் காப்­பீட்டுத் திட்­டத்­தில் விவ­சா­யி­கள் காப்புறுதி எடுத்திருந்தால் உடனே இழப்­பீட்டுத் தொகை வழங்­கப்­படும் என்று முதல்­வர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே “மின் வாரியம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளால் உயிரிழப்பு இல்லாமல் மக்களைப் பாதுகாத்துள்ளோம்,’’ என்று மின் துறை அமைச்சர் தங்க மணி தெரிவித்துள்ளார்.

சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட 16 மாவட்டங் களில் 2,250 வழித்தடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்றார்.

மின் விநியோகம் படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!