சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய புதிய கருத்துக்கணிப்பு வெளியீடு அதிமுக 122; திமுக 111 தொகுதிகளைக் கைப்பற்றும்

சென்னை: தமி­ழ­கத்­தில் இன்­னும் இரு வாரங்­க­ளுக்­குள் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் அடுத்து ஆட்­சி­யைப் பிடிக்­கப்­போ­வது ஆளுங்­கட்சிக் கூட்­ட­ணியா, எதிர்க்­கட்சிக் கூட்­ட­ணியா என்பது குறித்த கேள் விக்கு புதிய கருத்­துக் கணிப்பு கள் விடை கண்டுள்ளன.

சம­ ப­லத்­து­டன் கள­மி­றங்கி உள்ள அதி­முக-திமுக ஆகிய இரு­பெ­ரும் கட்சிகளுக்குள் எந்­தக் கட்­சிக்கு மக்­கள் செல்­வாக்கு அதி­கம் உள்­ளது என்­பது குறித்து 'ஜன­நா­ய­கக் கூட்­ட­மைப்பு மற்­றும் உங்­கள் குரல்' என்ற தன்­னார்வ அமைப்பு கருத்­துக் கணிப்பு நடத்­தி­யுள்­ளது.

அதன்­படி, இந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அதி­முக கூட்­டணி 122 இடங்­க­ளைக் கைப்­பற்றி ஆட்சி அமைக்­கும் என்­றும் திமுக கூட்­டணி 111 இடங்­களில் வெற்­றி­பெ­றும் என்­றும் அம­முக ஒரு இடத்­தைக் கைப்­பற்­றும் என்­றும் முடிவுகள் கூறுகின்றன.

'ஜன­நா­ய­கக் கூட்­ட­மைப்பு மற்­றும் உங்­கள் குரல்' என்ற இந்த தன்­னார்வ அமைப்பு கடந்த 2016ல் கருத்­துக் கணிப்­பு­க­ளைத் துல்­லி­ய­மாக வெளியிட்­ட­தை அடுத்து, இந்த அமைப்­பின் கருத்­துக் கணிப்புகளைத் தெரிந்­து­கொள்ள மக்­கள் ஆர்­வம் காட்டி வந்­த­னர்.

இந்நிலையில், இம்முறை அதி முகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அமைப்பு கூறியுள்ளது.

இம்மாதம் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமி­ழ­கம் முழு­வ­தும் 80,000க்கும் அதிகமான மக்­க­ளி­டம் இந்தக் கருத்­துக்­க­ணிப்புகள் நடத்­தப்­பட்டுள்­ளன.

அதி­மு­க­வின் தேர்­தல் அறிக்கை மக்­க­ளி­டம் நல்ல வர­வேற்பைப் பெற்­றுள்­ள­தாக கருத்துக் கணிப்பு குறிப்பிட்டுள்ளது.

அதே­போல, கரு­ணா­நிதி இல்­லா­மல் திமுக சந்­திக்­கும் முதல் சட்­ட­மன்­றத் தேர்­தல் என்­றா­லும், திமு­க­விற்­கான நிரந்­தர வாக்கு வங்­கிக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­படவில்லை என்­பது பெரும் பல­மாக அமைந்­துள்­ளது.

ஆனால், நாடா­ளு­மன்றத் தேர்­தல் போல் இல்­லா­மல் தற்­போது திமுக கூட்­டணிக் கட்­சி­கள் அதிக தொகுதிகளில் தோல்­வி­க­ளைச் சந்­திக்­கும் நிலையும் உள்­ளது.

இது திமுக ஆட்சியைப் பிடிக்க முடி­யா­மல் போவ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ள­தாகவும் கருத்­துக் கணிப்புகள் தெரி­விக்­கின்றன.

கமல்­ஹா­ச­னின் மநீம கட்­சி­யின் வரவு திமுக கூட்­ட­ணி­யின் வாக்­கு­களை வெகு­வாக பாதித்துள்­ளது. அம­முக கூட்­டணி, மநீம கூட்­ட­ணி­கள் சேர்ந்து 10% வாக்­கு­க­ள் பெற­லாம். இருப்­பி­னும் அந்த வாக்­கு­கள் தொகு­தி­க­ளைக் கைப்­பற்ற உத­வா­மல் போனாலும் இரு முக்கிய கட்­சி­க­ளின் வெற்­றி­வாய்ப்­பில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!