தடுப்பூசிக்கு தட்டுப்பாடு; மக்கள் தவிப்பு

மதுரை: ஒரு­பு­றம் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மக்­கள் குவிந்து வரும் நிலை­யில், மறு­பு­றம் மதுரை, கன்­னி­யா­கு­மரி, திருப்­பூர், ேவலூர், திரு­நெல்­வேலி, சேலம் உள்­ளிட்ட மாவட்டங்களில் இத்­தடுப்­பூ­சி­க­ளுக்குக் கடும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக பல அரசு தடுப்­பூசி மையங்­களும் மூடப்­பட்­டுள்ள­தால் தடுப்­பூசி போடமுடி­யா­மல் பொதுமக்­கள் அலைக்­க­ழிக்­கப்­பட்டு வருவதாகவும் குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன.

சில இடங்­களில் தடுப்­பூ­சி­கள் இருப்­பில் இல்­லை­யென சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கைவி­ரித்து விடு­வ­தா­க­வும் கூறப்படுகிறது.

தமி­ழ­கம் முழு­வ­தும் கிரு­மித்­தொற்று கடந்த சில வார­ங்களாகவே வேக­மா­கப் பரவி வருகிறது.

இதையடுத்து, முன்­பெல்லாம் தடுப்­பூசி போட்­டுக்கொள்ள அவ்­வ­ள­வாக ஆர்­வம் காட்­டாத மக்­கள், இப்­போது தடுப்­பூசி போட்­டுக் கொள்ள விரைந்து வருகின்றனர்.

இந்­நி­லை­யில், தடுப்­பூசி செலுத்­திக் கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கடந்த வாரத்­தை­விட மும்மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

ஏப்­ரல் முதல் வாரத்­தில் 70,000 பேருக்கு மட்­டுமே போடப்­பட்டு வந்த தடுப்­பூசி, தற்­போது ஒவ்­வொரு நாளும் இரண்டு லட்­சம் பேருக்­கும் மேல் போடப்­பட்டு வரு­வ­தா­க­வும் கடந்த வெள்­ளியன்றும் 2,01,495 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டதா­க­வும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே, திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி, மன்­னாா்குடி, நாமக்­கல், கரூா் உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் உள்ள பெரும்­பா­லான மையங்­களில் தடுப்­பூசி போடச் சென்­ற­வா்­களில் குறிப்­பிட்ட ஒரு சிலருக்கு மட்­டுமே தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டன. மற்­ற­வா்­கள் மறு­நாள் வந்து போட்­டுக்­கொள்­ள­லாம் என்று திருப்பி அனுப்பப்பட்டனர்.

இத­னால் பல்­வேறு மையங்­களில் ஊசி போட வந்­தி­ருந்­த­வா்­க­ளுக்­கும் மருத்­து­வப் பணி­யா­ளா்­க­ளுக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. ஒரு­சில மையங்­களில் தடுப்­பூசி போட வந்­த­வா்­கள் காலை முதல் காத்­தி­ருந்து, தடுப்­பூசி போடாம­லேயே வீடு திரும்­பினா்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!