சசிகலாவுடன் பேசிய மேலும் ஐந்து அதிமுக நிர்வாகிகள் நீக்கம்

சசிகலாவுடன் பேசிய மேலும் ஐந்து அதிமுக நிர்வாகிகள் நீக்கம்

1 mins read
82772f03-84d0-4d3e-8fd7-4f0957a2f12b
அரசியலை விட்டு இனி ஒருபோதும் விலகமாட்டேன் என்று கூறியுள்ள சசிகலா.படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

ராணிப்பேட்டை: அதி­முக உறுப்­பி­னர்­கள் சிலர் சசி­க­லா­வு­டன் தொடர்ந்து தொலை­பே­சி­யில் பேசி வரு­வ­தால், அவர்­க­ளைக் கட்­சியை விட்டு நீக்கி, ஒழுங்கு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­ற­னர் அதி­முக தலை­வர்­கள்.

இது­கு­றித்து கழ­கத்­தின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எடப்­பாடி கே.பழ­னி­சாமி இணைந்து அறிக்கை வெளி­யிட்­டுள்­ள­னர்.

அதில், கழ­கத்­தின் கொள்கை, குறிக்­கோள், கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணான வகை­யில் செயல்­பட்­ட­தால் சேலத்­தைச் சேர்ந்த இராம கிருஷ்­ணன், சிவ­கங்­கை­யைச் சேர்ந்த ஆர்.சர­வ­ணன், ஆர்.சண்­மு­கப்­பி­ரியா, நெல்­லை­யைச் சேர்ந்த திம்­ம­ரா­ஜ­பு­ரம் ராஜ­கோ­பால், டி. சுந்­தர்­ராஜ் ஆகிய ஐவரையும் கட்­சி­யின் அடிப்­படை உறுப்­பி­னர் உள்­ளிட்ட அனைத்­துப் பொறுப்­பு­களில் இருந்­தும் நீக்குவதாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, "அர­சி­யலை விட்டு இனி ஒரு­போ­தும் வில­க­மாட்­டேன்,'' என சசி­கலா தெரி­வித்­துள்­ளார். சிறை­யில் இருந்து வெளி­வந்த பிறகு அர­சி­ய­லில் இருந்து ஒதுங்­கு­வ­தாக அறி­வித்த சசி­கலா, இப்­போது தினந்­தோ­றும் தொண்­டர்­களு­டன் தொலை­பே­சி­யில் உரை­யாடி வரு­கி­றார்.

ராணிப்­பேட்­டை­யைச் சேர்ந்த சுரேஷ் என்­ப­வ­ரு­டன் சசி­கலா பேசி­ய­போது, "அம்­மா­கூட நானும் சேர்ந்து வளர்த்த கட்சி வீணாகி விடக்கூடாது. இனி அதி­மு­கவைக் காப்­பாற்­று­வதே என் வேலை. இனி ஒதுங்கி இருப்­பேன், விலகி இருப்­பேன் என நான் சொல்­லமாட்­டேன். தொண்­டர்­க­ளின் நம்­பிக்கை வீண் போகாது. நான் நிச்­ச­யம் வரு­வேன்," என்று கூறியுள்ளார்.