தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 27,000 பேர் பதவியேற்பு

தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 27,000 பேர் பதவியேற்பு

2 mins read
e9fa5f69-51cc-4c8a-9a1e-d66d8041ce58
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் நேற்று தமது குடும்பத்தாருட னும் ஆதரவாளர் களுடனும் வந்து சிவந்திபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.படம்: ஊடகம் -

பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மோடி தமிழில் வாழ்த்து

சென்னை: அண்­மை­யில் நடை­பெற்ற ஊரக உள்­ளாட்­சித் தேர்­த­லில் பல்­வேறு பத­வி­யி­டங்­களுக்­குப் போட்டி­யிட்டு வெற்­றி­பெற்ற சுமார் 27 ஆயி­ரம் உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­கள் நேற்று பத­வி­யேற்­றுக் கொண்­ட­னர்.

அவர்­களில் நெல்லை மாவட்­டத்­தைச் சேர்ந்த 90 வயது மூதாட்­டி­யான பெரு­மாத்­தா­ளும் ஒரு­வர். அவர், சிவந்­திபட்டி ஊராட்சி மன்றத் தலை­வ­ராக பத­வி­யேற்­றுக் கொண்­டார்.

தமி­ழ­கத்­தில் புதி­தாக பிரிக்­கப்­பட்ட 9 மாவட்டங்களில் அண்­மை­யில் இரு­கட்­டங்­க­ளாக உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெற்­றது.

இதன் மூலம் வார்டு உறுப்­பினர்­கள், கவுன்­சி­லர்­கள், கிராம பஞ்­சா­யத்து தலை­வர்­கள், இந்த கிராம பஞ்­சா­யத்­து­களில் வார்டு உறுப்­பி­னர்­கள் என மொத்­தம் 27,792 பத­வி­யி­டங்­க­ளுக்­குப் பிர­தி­நி­தி­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர்.

உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­க­ளின் முதல் கூட்­ட­மும் பத­வி­யேற்பு நிகழ்­வும் நேற்று நடை­பெற்­றது. அனை­வ­ரும் தேர்­தல் நடத்­தும் அலு­வ­லர்­கள் முன்­னி­லை­யில் பதவி­யேற்­ற­னர்.

இந்­நி­லை­யில் உள்­ளாட்­சித் தேர்­த­லில் பாஜக சார்­பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற அனை­வ­ருக்­கும் பிர­த­மர் மோடி தமி­ழில் வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.

"தேர்­த­லில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட எங்­கள் கட்­சிக்­கா­ரர்­களை வாழ்த்த விரும்­பு­கி­றேன். எங்­கள் மீது நம்­பிக்கை வைத்த தமிழ்­நாட்­டின் சகோ­தர சகோ­த­ரி­க­ளுக்கு நன்றி. அரு­மை­யான தமி­ழ­கத்­தின் முன்­னேற்­றத்­திற்­காக தொடர்ந்து உழைப்­போம்," எனப் பிர­த­மர் மோடி தமது டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஒன்­பது மாவட்ட ஊரக உள்­ளாட்­சித் தேர்­த­லில் பாஜக 8 கவுன்­சி­லர், 41 பஞ்­சா­யத்து தலை­வர்­கள், 332 வார்டு உறுப்­பி­னர்­க­ளுக்­கான இடங்க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது.

இதே ­வே­ளை­யில் திமுக சுமார் 90 விழுக்­காடு இடங்­க­ளைக் கைப்­பற்றி உள்ளது.