தடுப்பூசி போட்டுக்கொண்டால் 25 கிலோ அரிசி இலவசம்

சென்னை: தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டால் 25 கிலோ அரிசி இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என்ற அறி­விப்­புக்கு வாலா­ஜா­பாத் பகுதி­யில் பொது­மக்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

வாலா­ஜா­பாத்தை அடுத்­துள்ள முத்­தி­யால்­பேட்டை ஊராட்­சி­யில் 90 விழுக்­காட்­டி­னர் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், மீத­முள்ள பத்து விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தயக்­கம் காட்டி வரு­வ­தால் அவர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் ஊராட்சி நிர்­வா­கம் 25 கிலோ இல­வச அரிசி என்ற அறி­விப்பை வெளி­யிட்­டது.

இதை­ய­டுத்து, ஏரா­ள­மா­னோர் நேற்று முன்­தி­னம் தடுப்­பூசி மையங்­க­ளுக்கு வந்­த­னர். அவர்­க­ளுக்கு முன்பே அறி­வித்­த­படி, இல­வச அரிசி வழங்­கப்­பட்­டது. இத­னால் பல­ன­டைந்­த­வர்­கள் ஊராட்சி மன்­றத்­தின் இந்தச் செயலைப் பாராட்டி உள்­ள­னர்.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் தடுப்­பூசி போடும் திட்­டம் சிறப்­பாக செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால், நவம்­பர் மாதம் மத்­திய அரசு சார்­பில் 1.40 கோடி கொரோனா தடுப்­பூ­சி­கள் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தினம் 1,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

மேலும் 14 பேர் கொரோனா பாதிப்­பால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இதன் மூலம் பலி எண்­ணிக்கை 36,097 ஆக உயர்ந்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் 1,172 பேர் தொற்­றுப் பாதிப்­பில் இருந்து மீண்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!