‘5ஜி’ ஏலத்தில் முறைகேடு என ஆ. ராசா புகார்

சென்னை: அண்­மை­யில் நடந்த '5ஜி' அலைக்­கற்றை ஏலத்­தில் முறை­கேடு நடந்­துள்­ள­தாக திமுக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆ. ராசா குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

இந்­தி­யா­வில் '5ஜி' அலைக்­கற்றை ஏலத்­திற்கு பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான மத்­திய அமைச்­ச­ரவை சில மாதங்­க­ளுக்கு முன் அனு­மதியளித்­தது.

கடந்த 26ம் தேதி '5ஜி' அலைக்­கற்­றைக்­கான ஏலம் தொடங்­கி­யது.

பார்தி ஏர்­டெல், ரிலை­யன்ஸ் ஜியோ, வோட­ஃபோன்-ஐடியா, அதானி குழு­மம் ஆகிய நான்கு நிறு­வ­னங்­கள் ஏலத்­தில் பங்­கு­ கேற்­றன.

இந்த ஏலத்­தின் முதல் நாளன்று, இது­வரை இல்­லாத அள­வுக்கு ரூ.1.45 லட்­சம் கோடி வரை நிறு­வ­னங்­கள் ஏலம் கேட்­ட­து என்று கூறப்­பட்­டது.

அதே­போல் கடந்த 2015ஆம் ஆண்­டில் நடை­பெற்ற '4ஜி' ஏலத்­தின் சாத­னையை முறி­ய­டித்து இருப்­ப­தா­க­வும் மத்­திய அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ணவ் கூறி­னார்.

ஆனால் யாரும் எதிர்­பா­ராத வகை­யில் '5ஜி' அலைக்­கற்­றைக்­கான ஏலம் ரூ.1.50 லட்­சம் கோடி வரை மட்­டுமே சென்­றுள்­ளது.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­ களைச் சந்­தித்த திமுக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆ.ராசா, '2ஜி' அலைக்­கற்றை ஏலத்­திற்கு பின் ரூ.1.76 லட்­சம் கோடி அர­சுக்கு இழப்பு என்று கூறி­னார்­கள்.

"ஆனால் '5ஜி' அலைக்­கற்றை ஏலத்­தில் முறை­கேடு நடை­பெற்று­உள்­ளது. '5ஜி' அலைக்­கற்றை ரூ.5 லட்­சம் கோடிக்கு ஏலம் போகும் என்று மத்­திய அரசு கூறி­யது. ஆனால் ரூ.1.5 லட்­சம் கோடிக்கு ஏலம் போயுள்­ளது. எஞ்­சிய பணம் எங்கு சென்­றது என்­பது பற்றி மத்­திய அரசு பதி­ல­ளிக்க வேண்­டும்," என்று ஆ. ராஜா கூறி­ய­தாக தமிழக ஊட­கம் வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!