ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட இபிஎஸ் தென்மாவட்ட சுற்றுப்பயணம்

சென்னை: ஓ.பன்­னீர்­செல்­வத்தை தென்­மா­வட்­டங்­க­ளி­லும் வீழ்த்தி தன் பலத்தைக் காட்ட அதி­மு­க­வின் இடைக்­கா­லப் பொதுச் செய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி திட்­ட­மிட்டு உள்­ளார்.

இதை 'ஆப­ரே­சன் சவுத்' என்று அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் கூறு­

கி­றார்­கள்.

அதில் முதற்­கட்­ட­மாக மதுரை, சிவ­காசி, விரு­து­ந­கர் ஆகிய மாவட்­டங்­களில் பழ­னி­சாமி தமது சுற்­றுப்­ப­ய­ணத்தை நேற்று முன்­தி­னம் தொடங்­கி­னார்.

அதி­முக இடைக்­கால பொதுச் செய­லா­ள­ரா­கப் பதவி ஏற்ற பிறகு முதன் முறை­யாக நேற்று முன்­தி­னம் தென் மாவட்­டங்­க­ளுக்கு வருகை தந்­தார் அவர்.

மதுரை, சிவ­காசி ஆகிய இடங்­களில் நடை­பெற்ற பொதுக் கூட்­டங்­களில் பங்­கேற்­ப­தற்­காக சென்­னை­யில் இருந்து விமா­னம் மூலம் மதுரை விமான நிலை­யம் வந்­தார் எடப்­பாடி பழ­னி­சாமி. மதுரை விமான நிலை­யத்­தில், அவ­ருக்கு அதி­முக தொண்­டர்­கள் மலர்­கள் தூவி­யும் மேளதா­ளங்­கள் முழங்­க­வும் உற்­சாக வர­வேற்பு அளித்­த­னர்.

ரிங் ரோடு வழி­யாக பிர­சார வாக­னத்­தில் மேலக்­கோட்டை அருகே சென்­ற­போது முன்­னாள் அமைச்­சர் ஆர்.பி.உத­ய­கு­மார் ஏற்­பாட்­டில் சாலை­யின் இரு­பு­ற­மும் தொண்­டர்­கள் திரண்டு இருந்­த­னர்

பிர­சார வாக­னத்­தில் எழுந்து நின்று வர­வேற்பை ஏற்­றுக்­கொண்டு இரட்டை விரல்­களை காண்­பித்­தவாறே சென்­றார் பழனி­ சாமி.

சிவ­ரக்­கோட்டை பகு­தி­யில் விவ­சா­யி­கள் ஏரா­ள­மாக திரண்டு விவ­சா­யி­க­ளுக்கு வாழ்­வா­தா­ரம் சிறக்க பல்­வேறு திட்­டங்­களை வழங்­கிய எடப்­பா­டி­யார் வாழ்க என்று கோஷ­மிட்­ட­னர். மாலை­யில் சிவ­காசி பொதுக்­கூட்­டத்­தில் பேசி­னார்.

தொடர்ந்து மாலை ஆறு மணி­ய­ள­வில் மதுரை பழங்­கா­நத்­தம் பகு­தி­யில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­தில் பேசி­னார். அப்­போது அவ­ருக்கு வெள்ளி செங்­கோல் நினைவு பரி­சாக வழங்­கப்­பட்­டது. முதல்­மு­றை­யாக இடம்பெற்ற தென்­மா­வட்ட சுற்­றுப்பய­ணம் மிகப்­பெ­ரிய எழுச்­சி­யாக அமைந்­த­தாக எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பி­னர் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில், மதுரையில் அனு­ம­தி­யின்றி மேடை அமைத்­தது, பதாகை வைத்தது தொடர்­பாக 6 அதி­மு­க­ வி­னர் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!