தேர்தலில் வெற்றி பெற்றதும் மேட்டுப்பாளையம் கல்லாறு கிராமத்தை தத்தெடுப்பேன்: எல்.முருகன்

மேட்டுப்பாளையம்: நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மத்திய அமைச்சர் எல்.முருகன், மேட்டுப்பாளையம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பஜனை கோவில் வீதி, தாசம்பாளையம் கோவில் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து ஓடந்துரை ஊராட்சிக்குட்பட்ட கல்லாறு பழங்குடியின கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அங்கிருந்த மக்கள், இதற்கு முன்பு இருந்த எம்.பி.க்கள் யாரும் எங்களுடைய கோரிக்கை எதனையும் நிறைவேற்றவில்லை என்றும், இந்த முறை கல்லாறு கிராமத்தின் எல்லா வாக்குகளும் பா.ஜ.க.விற்குத்தான் என்றும் கூறினார்கள்.

அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, “இதற்கு முன் இருந்தவர்கள் எப்படியோ இருந்திருக்கலாம். ஆனால், நான் பொறுப்பேற்றவுடன் இந்தக் கிராமத்தைத் தத்தெடுத்து, இந்தக் கிராமத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன்,” என்றார்.

அதன்பின் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் சடையம்பாளையம் காய்கறி மண்டியில் பிரசாரம் செய்தார். அப்போது மலைத் தோட்ட காய்கறிகளை ஏலமிடுவதை நேரில் பார்த்து காய்கறிகளின் விலை நிலவரத்தைக் கேட்டறிந்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!