பிரான்சில் இருந்து கோவைக்கு மிதிவண்டியில் வந்த பெண்

சென்னை: ‘மண் காப்போம்’ இயக்கம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயது மாது நேத்தலி மாஸ், பிரான்ஸ் முதல் இந்தியா வரை 7,000 கி.மீ. மிதிவண்டி ஓட்டி சாதனை படைத்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தனது சொந்த ஊரான பிரான்சின் டூலோன் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இத்தாலி, ஸ்லோவேனியா, குரோவேஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் மற்றும் ஓமான் வழியாக சைக்கிள் ஓட்டி, டிசம்பர் மாதம் 1ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தார். பல்வேறு மாநிலங்கள் வழியாக நேத்தாலி மாஸ், கோவை ஈஷா யோகா மையத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். இதுகுறித்து நேத்தலி மாஸ் கூறும்போது, “அரசியல் தலைவர்கள் ‘மண் காப்போம்’ திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான சட்டங்கள் மற்றும் புத்துயிர் அளிக்கும் நடைமுறைகளைச் செயல்படுத்தவேண்டும்,” என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!