You are here

தலைப்புச் செய்தி

பொங்கோல் ஈஸ்ட் நகரில் புதிய சமூக மன்றம்

பொங்கோல் ஈஸ்ட் தொகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க மற்றொரு குழந்தைப் பராமரிப்பு நிலையத் தைப் பெறுவார்கள். வரும் 2020ஆம் ஆண்டில் திறக்கப்படவிருக்கும் புதிய பொங்கோல் ஈஸ்ட் சமூக மன்றத்தில் அந்தக் குழந்தைப் பராமரிப்பு நிலையம் செயல்படும். ஐந்து மாடிகள் கொண்ட புதிய சமூக மன்றக் கட்டடத்தின் உச்ச மாடியில் குழந்தைப் பராமரிப்பு நிலையம் அமைந்திருக்கும். சமூக மன்றக் கட்டடத்தில் கீழ்த்தளமும் இருக்கும்.

குடியிருப்பாளர்கள் வசதிக்காக சுவா சூ காங் குழுத் தொகுதியில் சமூக சுகாதாரச் சாவடி

குடியிருப்பாளர்கள் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை சமூக இடங்களில் எளிதில் பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சுவா சூ காங் குழுத் தொகுதியில் சமூக சுகாதாரச் சாவடிகள் கியட் ஹோங், சுவா சூ காங், நன்யாங், ஹில்வியூ, அர்-ரவுதா பள்ளி வாசல், அல்-கேர் பள்ளிவாசல் ஆகிய ஆறு இடங்களில் நேற்று தொடங்கப்பட்டன. தேசிய பல்கலைக்கழக மருத் துவமனைக் குழுமத்தின் ஒத்து ழைப்புடன் இத்திட்டம் மேற்கொள் ளப்படுகிறது. நாள்பட்ட நோய் உடையவர்கள் காலந்தாழ்த்தாமல் விரைவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள சமூக சுகாதாரச் சாவடிக் குச் சென்று சிகிச்சை நாடலாம்.

பரந்த சமூக இலக்கு தேவை : அமைச்சர் இந்திராணி ராஜா

வைதேகி ஆறுமுகம்

மக்கள்தொகை மூப்படைந்து வரும், பல இன, பல கலாசார சிங்கப்பூரில் ஒருவருக் கொருவர் உதவும் அடிப்படையிலான பரந்த சமூக இலக்கு அவசியம் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி இரண் டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா வலியுறுத்தியுள்ளார். முதுமைக் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ உதவும் நோக்கத்துடன் மக்கள் ஒரே சமூகமாகச் சேர்ந்து செயல்படவேண்டியது தேவையான ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

மாணவர் வருங்காலத்தை வளமாக்கும் திட்டங்கள்

வைதேகி ஆறுமுகம்

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்களுக்கென சிறப்பான இரு திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. தலைமைத்துவ, வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றை மாண வர்களிடையே வளர்க்கச் செய் யும் இத்திட்டங்கள் அவர்களின் கல்விப் பயணத்திற்கும் வருங் கால வேலைச் சூழலுக்கும் பய னுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர், கல்வி, நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.

கூடுதல் சிங்கப்பூரர்களுக்கு வேலைகள்; வேலையின்மை விகிதம் உயர்வு

இவ்வாண்டின் முதல் பாதியில் கூடுதலான சிங்கப்பூரர்களுக்கு வேலைவாய்ப்பு அமைந்தபோதும் நீண்டகால வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை தெரிவித்தது. சென்ற ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங் களில் அதிகமான சிங்கப்பூரர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு தேடிக் கொண்டனர். இதில் உள்நாட்டி லேயே வேலை கிடைத்தோரின் எண்ணிக்கை 6,500 ஆனது.

மலேசிய விரைவுச்சாலையில் பேருந்து விபத்து: சிங்கப்பூர் திரும்பிய மூவர் பலி, 14 பேர் காயம்

மலேசிய நெடுஞ்சாலையில் ஒரு சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரி ஒன்றின் மீது மோதியதில் மூன்று பேர் உயிரி ழந்தனர். இதர 14 பேர் காயம் அடைந்ததாக சைனா பிரஸ் செய் தித்தாள் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் 25 பயணிகள் இருந்தனர். ஓட்டு நர்கள் இரண்டு பேர் இருந்தனர். அந்தப் பேருந்து கோலாலம் பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்தபோது வடக்கு =தெற்கு விரைவுச்சாலையில் விடி காலை சுமார் 1.30 மணிக்கு விபத்துக்கு உள்ளாகிவிட்டது.

அறுவகை இணையப் பாதுகாப்புமுறை பரிந்துரை

சிங்கப்பூரில் உள்ள நிதி நிறுவனங் களுக்கான இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் நாணய ஆணையம் திட்டமிட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் அவற்றின் தகவல் தொழில்நுட்ப முறையைப் பாதுகாக்க ஆறு வகை இணையப் பாதுகாப்பு நடவடக்கைகளை ஆணையம் பரிந்துரை செய் துள்ளது. ஆணையத்தில் தற்போது நடப்பில் இருக்கும் தொழில்நுட்ப அபாய நிர்வாக வழிகாட்டி நெறி முறைகளின் ஒரு பகுதியாக இந்த ஆறு வகை நடவடிக்கைகளும் உள்ளன. அவற்றை இனி சட்ட ரீதியாகக் கட்டாயமாக்க ஆணையம் பரிந் துரைக்கிறது. தற்போது அதிகமான நிதித் துறை செயல்முறைகள் இணையம் வழி நடைபெறுகின்றன. அதே நேரத்தில் இணையம்வழி தாக்குதல்களும் அதிகரித்து உள்ளன.

அதிநவீன சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம்

தேசிய பல்கலைக்கழகத்தின் i4.0 என்ற புதிய கட்டடத்தில், இயந்திர மனிதன் முகத்தை அடையாளம் கண்டு வாடிக்கையாளர்களின் சுவையுணர்வுக்கேற்ப சிறந்த காபியை வழங்கும் காபி கடை அமைந்துள்ளது. தனது அதிநவீன ஆறு மாடிக் கட்டடத்தில் இதுபோன்ற 250 வரையிலான, செயற்கை நுண் ணறிவு, இயந்திர கற்றல் போன்ற புதிய தொழில் முயற்சிகளை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த வுள்ளது. இதற்காக $25 மில்லியன் வெள்ளி வரை தேசிய பல்கலைக் கழகம் செலவிடும்.

விசாரணை கோரும் அதிகாரி

முழு நேர தேசிய சேவையாளர் ஒரு வர் கடந்த மே மாதம் மாண்ட சம்பவத்தின் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிங்கப்பூர் குடி மைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவர் வழக்கு விசாரணை கோர எண்ணம் கொண்டுள்ளார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசிய சேவை யாளரான 22 வயது கார்ப்பரல் கோக் யுவன் சின், பகடிவதை (ragging) சம்பவத்தின் தொடர்பில் துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தின் 12 மீட்டர் ஆழமான நீரேற்றக் கிணற்றில் மூழ்கி மாண்டுகிடக்கக் காணப்பட்டார். மலேசியாவைச் சேர்ந்த சிங்கப் பூர் நிரந்தரவாசியான அவர், அப்போ து இன்னும் இரு நாட்களில் தேசிய சேவையை முடிக்க இருந்தார்.

Pages