You are here

உல‌க‌ம்

‘கெஅடிலான் கட்சியுடன் அமனா இணையும் யோசனை நிராகரிப்பு

கோலாலம்பூர்: பிகேஆர் எனப்படும் கெஅடிலான் கட்சியும் பாஸ் கட்சியிலிருந்து பிரிந்த கட்சியான அமனா நெகாராவும் ஒன்றாக இணையவேண்டும் என்று பிகேஆர் இளைஞர் அணி துணைத் தலைவரான அபிப் பஹார்டின் கூறிய யோசனையை இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் நிராகரித்துள்ளனர். “அபிப் பஹார்டின் யோசனை கூற உரிமை உண்டு. ஆனால் இரு கட்சிகளும் இணைவதற்கு இன்னும் காலம் கனியவில்லை” என்று கெஅடிலான் கட்சி தலைமைச் செயலாளர் கூறினார்.

தென்சீனக் கடல் தீவுகளில் தற்காப்பை வலுப்படுத்தும் சீனா

வா‌ஷிங்டன்: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் சீனா உருவாக்கிய ஏழு செயற்கைத் தீவுகளில் தற்காப்பு ஆயுதங்களை அந்நாடு பொருத்தியுள்ளதை துணைக்கோளப் படங்கள் காட்டுவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படும் அனைத்துலக ஆய்வு நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது. சீனா அண்மைய ஆண்டுகளில் உருவாக்கிய செயற்கைத் தீவுகளில் ராணுவ சாதனங்களைப் பொருத்தி யிருப்பதை ஆசிய கடல்துறை அமைப்பு வெளியிட்ட துணைக் கோளப் படங்கள் காட்டுவதாக அனைத்துலக ஆய்வு நிலையம் கூறியது. தென்சீனக் கடல் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு ஆயத்தமாக சீனா அதன் தற்காப்பு முறைகளை வலுப்படுத்தி வருவதை இது உணர்த்துகிறது.

இந்தோனீசியா எதிர்பாரா வெற்றி

போகோர்: சுசுகிக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கான முதல் ஆட்டத் தில் யாரும் எதிர்பாராத வகையில் இந்தோனீசியா வெற்றி பெற்று உள்ளது. நடப்பு வெற்றியாளர் தாய்லாந் துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் இந்தோனீசியா வாகை சூடியது. இதன் மூலம் கிண்ணம் வெல்லும் வாய்ப்பை அக்குழு நெருங்கி உள்ளது. போட்டியின் முதல் சுற்றில் கடுமையான போராட்டத்துக்குப் பின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தோனீசியா சொந்த மண் ணில் நடைபெற்ற இறுதி ஆட்டத் துக்கான முதல் ஆட்டத்தில் வெற்றியைச் சுவைத்துள்ளது.

அலெப்போ நகரம் முழுமையாக அரசாங்கப் படையின் கட்டுப்பாட்டில் வந்தது

படம்: ஏஎஃப்பி

டமாஸ்கஸ்: அலெப்போ நகரம் முழுமையாக தங்கள் கட்டுப் பாட்டில் வந்திருப்பதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அலெப்போ நகரின் எஞ்சிய பகுதிகளையும் அதிபர் ஆசாத் தின் படை கைப்பற்றியதன் மூலம் அந்நகரம் மீண்டும் அரசாங்கப் படை வசம் வந்துள்ளது என்று ரஷ்யாவும் கூறியுள்ளது. அந்நகரைக் கைப்பற்ற இதுவரை மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை செவ்வாய்க் கிழமையுடன் முடிந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அங்கு இப்போது சண்டை எதுவும் இல்லை என்று அந்நகர மக்களும் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவில் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள்

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக கடந்த 7 ஆண்டு களுக்கும் மேலாக தாக்குதல் உள்ளிட்ட எதிர்ப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்நாட்டின் பொருளி யல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக ‘போர்னோ’ மாநிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் உணவின்றி தவிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தீவிரவாதிகளின் தாக்குதலால் ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். சுமார் 20,000 பேர் தாக்குதல்களில் உயிரிழந்தனர். உணவில்லாத தால் ஏராளமான குழந்தைகள் பசி பட்டினியால் தவிக்கின்றனர்.

அன்வார் இப்ராகிமின் மேல்முறையீடு தோல்வி

கோலாலம்பூர்: ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு மற்றும் சிறைத் தண்டனைக்கு எதிராக மலேசியாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்திருந்த மேல்முறையீட்டை மலேசிய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஐந்து ஆண்டு கால சிறைத்தண்டனையை ரத்து செய்ய அன்வார் மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. அதனால் 2018 நடுப்பகுதி வரை அன்வார் சிறை வாசத்தைத் தொடர வேண்டும். ஆனால் முயற்சியைக் கைவிடப் போவதில்லை என்று அன்வார் இப்ராகிம் சூளுரைத் துள்ளார். “நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். இது முடிவல்ல.

ஜகார்த்தா ஆளுநருக்கு எதிரான சமய நிந்தனை வழக்கு

படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இஸ்லாத்தை அவமதிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று கண்ணீருக் கிடையே அஹோக் என்று அழைக்கப்படும் ஜகார்த்தா ஆளுநர் பாசுக்கி ஜஹஜா புர்னாமா கூறியுள்ளார். ஜகார்த்தா ஆளுநர் பாசுக்கிக்கு எதிரான சமய நிந்தனை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு எதிரான விசாரணை யின்போது நீதிமன்றத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கான தீவிரவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அலெப்போவில் தாக்குதல்; அவதியுறும் மக்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

டமாஸ்கஸ்: போராளிகள் வசம் உள்ள அலெப்போ நகரை முழுமையாகக் கைப்பற்ற அரசாங்கப் படையினர் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலுக்கு அந்நகர மக்கள் பலர் பலியாகி வருகின் றனர். சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படையினர், ரஷ்ய விமானப் படைகளின் ஆதரவுடன் அலெப்போ நகரில் முன்னேறிச் செல்லும் வேளையில் போராளிகள் பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். போராளிகளிடம் எஞ்சியுள்ள பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு அரசாங்கப் படையினர் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசித் தாக்கி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மாமன்னராக பதவியேற்றார் சுல்தான் முகம்மது

படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மலேசியாவின் 15வது மாமன்னராக 5வது கிளந்தான் சுல்தான், சுல்தான் முகம்மது நேற்று அந்நாட்டின் மாமன்னராக பதவி ஏற்றார். அதே நேரத்தில், பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா துணை மாமன்னராக பதவி ஏற்றுக்கொண்டார். கோலாலம்பூரில் இஸ்தானா நெகாராவில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இருவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண் டனர். கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில், 47 வயதான 5வது கிளந்தான் சுல்தான், சுல்தான் முகம்மது நாட்டின் 15வது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீனா, தென்கொரியா, ஜப்பான் சந்திப்பு தள்ளிவைப்பு

தோக்கியோ: சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இம்மாதம் ஜப்பானில் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக இந்தப் பேச்சுவார்த்தையை இன்னொரு தேதிக்கு தள்ளிவைக்க தீர்மானித்ததாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கி‌ஷிடா கூறினார். அடுத்த ஆண்டு உரிய நேரத்தில் தாங்கள் சந்தித்துப் பேசவிருப்பதாக அவர் சொன்னார்.

Pages