You are here

இந்தியா

பெங்களூருவில் கருணாநிதி முழு ஓய்வு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை நோயினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதிக்கப் பட்டார். அவரது உடல் சோர் வடைந்த காரணத்தால் ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை யில் நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார். மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு ஸ்கேன், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு கண்டு பிடிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வரு வதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மருத்துவக் குழு அளித்துவரும் சிகிச்சையில் கருணாநிதி குணம் அடைந்து வருகிறார்.

ஒரே நாளில் 3 மேம்பாலங்கள் திறப்பு: பொதுமக்கள் வியப்பு

சென்னை: சென்னை வடபழனி, அமைந்தகரை அண்ணா வளைவு, ரெட்டேரி சிக்னல் ஆகிய 3 இடங் களில் கட்டப்பட்டிருந்த மேம்பாலங் கள் நேற்று முன்தினம் ஒரேநாளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திடீரென திறக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வடபழனி, அமைந்தகரை அண்ணா வளைவு, ரெட்டேரி சிக்னல் போன்ற மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் அண்ணா வளைவு அருகே மேம்பாலத்தின் ஒரு பகுதி மட்டும் திறக்கப்பட்டிருந்தது.

மர்மமாக மடிந்த மயில்கள்

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திண்டமங்கலம் காட்டுப் பகுதியில் கடந்த இரு நாட்களாக மயில்கள் மர்ம மான முறையில் மடிந்து வருகின்றன. இதுவரை ஐந்து மயில் கள் மாண்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் கால்நடை மருத் துவர்களிடம் அவற்றை எடுத்துச் சென்றனர். உயிரிழந்த மயில்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் நச்சு கலந்த உணவைச் சாப்பிட்டதால் அவை மாண்டதாகத் தெரிவித் தனர். இதையடுத்து அங்குள்ள வயல்வெளிப் பகுதிகளில் ஆய்வு செய்தபோது வயல்வெளிகளில், பல இடங்களில் தானியங்களில் விஷம் கலந்து தூவியிருப்பது தெரிய வந்து உள்ளது. இது குறித்து தொளசம்பட்டி போலிசாரிடமும் வனத்துறையினரிடமும் அப்பகுதியினர் புகார் செய்துள்ளனர்.

அருண் ஜெட்லி: ரூபாய் தட்டுப்பாடு இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும்

புவனேசுவரம்: இந்தியாவில் பணத் தட்டுப்பாடு இன்னும் ஆறு மாதங் களுக்கு நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். நாடு முழுவதும் 86 விழுக்காடு புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ஆம் தேதி அறி விக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் அதற்கு ஈடாக 100 ரூபாய், 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவில்லை. இதனால் மக்களிடம் பணப் புழக்கம் முற்றிலும் முடங்கியது.

புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க ஏடிஎம் சீரமைப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.500, ரூ.2000 நோட்டுகளை விநியோகிப்பதற்காக 1.80 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் 90 விழுக்காடாகும். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் தடை செய்தது. புதிய ரூ.500, 2000 நோட்டுகளை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, புதிய நோட்டுகளை விநியோகிக்க ஏதுவாக நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ப.சிதம்பரம்: எனது நற்பெயரை சீர்குலைக்க முயல்கிறார்கள்

சென்னை: ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் தமக்கும் தனது குடும் பத்தாருக்கும் வீண் நெருக்கடி கொடுக்கும் வகையில் நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப் பதாக முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தன் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான அமலாக்கத் துறையின் நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும் தனக்கும் தனது குடும் பத்துக்கும் உள்ள நற்பெயரைச் சீர்குலைக்கும் நடவடிக்கை என் றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வேலை செய்யாத தமிழக அமைச்சர்கள்: திருநாவுக்கரசர் புகார்

சென்னை: தமிழக முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அமைச்சர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார். இதற்கான காரணம் தெரிய வில்லை என்றும், அமைச்சர்கள் இவ்வாறு வேலை செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட் டுள்ளார். “முதல்வர் ஜெயலலிதா விரை வில் பூரண நலம் பெறுவார். அதற்காக தமிழக அமைச்சர்கள் வேலை செய்யாமல் இருப்பது நல்லதல்ல. இரவில் சென்று கோவில்களில் வழிபாடு நடத்துங் கள். பகலில் கோட்டையிலும், மக் கள் மத்தியிலும் இருங்கள்.

100,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜப்பான்

இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு இன்னும் வலுவடைவதற்கு அச்சாரமிடப் பட்டுள்ளது. திறமை, தகுதி இருந்தும் வேலையின்றித் தவிக்கும் சுமார் ஒரு லட்சம் இந்திய இளையர் களுக்கு ஜப்பான் வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாக இந்தியாவின் ‘திறன் மேம்பாட்டு அமைச்சை’ மேற்கோள்காட்டி ‘இந்தியா டுடே’ இணையத்தளம் செய்தி வெளி யிட்டு இருக்கிறது. வரும் 2020ஆம் ஆண்டில் ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக் கின்றன. உலகின் ஆகப் பெரிய அவ்விளையாட்டுத் திருவிழாவிற்கான ஆயத்தப் பணிகளில் ஜப்பான் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் நேற்று அனுமதிக்கப் பட்டார். இது தொடர்பாக, “ஊட்டச் சத்து, நீர்ச்சத்து குறைபாடு களைச் சீர்செய்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் குழு அவரைக் கண்காணித்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்,” என்று அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இரு பேருந்துகள் மோதல்: ஐவர் பலி

விழுப்புரம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பேர் உடல் நசுங்கிப் பலியாகினர். நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று, கள்ளக்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புக் கட்டைகள் மீதேறி எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், இரு பேருந்துகளில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். இதைக் கண்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவர்களை மீட்டனர். எனினும் படுகாயமடைந்த ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Pages