You are here

இந்தியா

ஆப்பிள் சாதனங்களின் பாதுகாப்பு வளையத்தைத் தகர்த்த மாணவர்

திருச்சூர்: கேரளாவைச் சேர்ந்த பொறியியல் மாணவரான ஹேமந்த் ஜோசஃப் (படம்) என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஆக்டிவேஷன் லாக்’கை திறந்து வியப்பை ஏற்படுத்தி உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஹேமந்த தமது நண்பருக்காக ஏற்கெனவே பயன்படுத் தப்பட்ட ஆப்பிள் ‘ஐபேட் ஏர்’ ஒன்றை வாங்கினார். ஆனால் அந்த ஐபேடின் முந்தைய உரிமையாளர் அதில் கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) போட்டிருந்த தால் அதனைத் திறக்க முடிய வில்லை. இதனால் ஐபேடை திறக்க ஹேமந்த் கடுமையாக முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஆக்டிவேஷன் லாக்’கைத் திறக்க பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை அளிக்க வேண் டும்.

கர்நாடக- கேரள எல்லையில் விசித்திர விலங்கு

பெங்களூரு: கர்நாடக- கேரள எல்லைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை விசித்திரமான விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளது. இதன் கைகளில் பயங்கர கூர்மையான நகங்கள் உள்ளன. இந்த விலங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகளையும் மனிதர்களையும் உண்ணும் ஏலியன் வகை விலங்காக இருக்கலாம் என்றும் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர். “இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் கவனமாகச் செல்லுங் கள்,” என்றும் அதில் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கச்சத்தீவு விழாவில் பங்கேற்போம்: ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு

ராமேசுவரம்: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று மத் திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு செல்வதற்கு தமிழக மீனவர்களுக்கு எப்போதுமே உரிமை உண்டு என்றும் தேவாலய விழாவில் பங்கேற்கப்போவதாகவும் ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்று இந்திய அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார். “கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவுக்கு சென்று அந்தோணியார் ஆலய விழாக்களில் கலந்துகொள்கிறோம்.

புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தில் மழை வெளுத்துக் கட்டியது

சென்னை: நாடா புயல் வலுவிழந்த போதிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை, மதுரையில் நேற்று முன்தினம் மதியம் முதல் மழை வெளுத்துக் கட்டியது. இதில் சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. நாடா புயல் நாகை, காரைக்கால் இடையே கரையைக் கடந்துள்ளது. பின்னர் வலுவிழந்த அப்புயல் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி யாக மாறியது. இதன் காரணமாகவே மாநிலத் தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. வெள்ளிக்கிழமை மதியம் பெய்யத் துவங்கிய மழையால், சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என முதல்வர் மம்தா அலறல்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என அலறியிருக்கிறார். ராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டதைத் கண்டித்து கோல்கத்தாவில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் மம்தா பனர்ஜி விடிய விடிய உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டார்.

பெங்களூருவில் கருணாநிதி முழு ஓய்வு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை நோயினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதிக்கப் பட்டார். அவரது உடல் சோர் வடைந்த காரணத்தால் ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை யில் நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார். மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு ஸ்கேன், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு கண்டு பிடிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வரு வதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மருத்துவக் குழு அளித்துவரும் சிகிச்சையில் கருணாநிதி குணம் அடைந்து வருகிறார்.

ஒரே நாளில் 3 மேம்பாலங்கள் திறப்பு: பொதுமக்கள் வியப்பு

சென்னை: சென்னை வடபழனி, அமைந்தகரை அண்ணா வளைவு, ரெட்டேரி சிக்னல் ஆகிய 3 இடங் களில் கட்டப்பட்டிருந்த மேம்பாலங் கள் நேற்று முன்தினம் ஒரேநாளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திடீரென திறக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வடபழனி, அமைந்தகரை அண்ணா வளைவு, ரெட்டேரி சிக்னல் போன்ற மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் அண்ணா வளைவு அருகே மேம்பாலத்தின் ஒரு பகுதி மட்டும் திறக்கப்பட்டிருந்தது.

மர்மமாக மடிந்த மயில்கள்

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திண்டமங்கலம் காட்டுப் பகுதியில் கடந்த இரு நாட்களாக மயில்கள் மர்ம மான முறையில் மடிந்து வருகின்றன. இதுவரை ஐந்து மயில் கள் மாண்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் கால்நடை மருத் துவர்களிடம் அவற்றை எடுத்துச் சென்றனர். உயிரிழந்த மயில்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் நச்சு கலந்த உணவைச் சாப்பிட்டதால் அவை மாண்டதாகத் தெரிவித் தனர். இதையடுத்து அங்குள்ள வயல்வெளிப் பகுதிகளில் ஆய்வு செய்தபோது வயல்வெளிகளில், பல இடங்களில் தானியங்களில் விஷம் கலந்து தூவியிருப்பது தெரிய வந்து உள்ளது. இது குறித்து தொளசம்பட்டி போலிசாரிடமும் வனத்துறையினரிடமும் அப்பகுதியினர் புகார் செய்துள்ளனர்.

அருண் ஜெட்லி: ரூபாய் தட்டுப்பாடு இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும்

புவனேசுவரம்: இந்தியாவில் பணத் தட்டுப்பாடு இன்னும் ஆறு மாதங் களுக்கு நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். நாடு முழுவதும் 86 விழுக்காடு புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ஆம் தேதி அறி விக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் அதற்கு ஈடாக 100 ரூபாய், 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவில்லை. இதனால் மக்களிடம் பணப் புழக்கம் முற்றிலும் முடங்கியது.

புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க ஏடிஎம் சீரமைப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.500, ரூ.2000 நோட்டுகளை விநியோகிப்பதற்காக 1.80 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் 90 விழுக்காடாகும். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் தடை செய்தது. புதிய ரூ.500, 2000 நோட்டுகளை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, புதிய நோட்டுகளை விநியோகிக்க ஏதுவாக நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Pages