You are here

திரைச்செய்தி

இறுதிக்கட்ட பணிகளில் உதயநிதியின் ‘சரவணன் இருக்க பயமேன்’

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவந்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்படத்தைத் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாயாசிங்: அசத்துகிறார் தனுஷ்

‘பவர் பாண்டி’ படத்தின் படப்பிடிப்பின்போது தேர்ந்த, அனுபவம் வாய்ந்த இயக்குநர் போல் தனுஷ் செயல்பட்டதாகப் பாராட்டு கிறார் நடிகை சாயாசிங். சுப்பிரமணியன் சிவா இயக்கத்தில் உருவான, ‘திருடா திருடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சாயாசிங். அதில் இடம்பெற்ற ‘மன்மத ராசா...’ பாடலுக்கு இருவரும் ஆடிய நடனம் ரசிகர்களால் சுலபத்தில் மறக்க முடியாதது. தனுஷ் தற்போது இயக்கு நராகவும் அவதாரம் எடுத்தி ருக்கிறார். ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சாயாசிங்குக்கும் நடிக்க வாய்ப்புக் கொடுத்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சாயாசிங் கூறும்போதே, தனுஷைப் புகழ்ந்து தள்ளினார்.

காதலியை மணக்கிறார் நடிகர் அஸ்வின்

நடிகர் அஸ்வின் விரைவில் தனது காதலியை மணக்க உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘நடுநிசி நாய்கள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் கக்குமனு. அதன்பிறகு, ‘மங்காத்தா’, ‘பிரியாணி’, ‘மேகா’, ‘வேதாளம்’, ‘ஜீரோ’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், அஸ்வினுக்கும் சோனாலி என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். ஜவுளித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள சோனாலி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

விழா இல்லாமலேயே வெளியாகும் ‘பைரவா’ படப் பாடல்கள்

பொங்கல் பண்டிகையின்போது திரைக்கு வர உள்ள படம் ‘பைரவா’. அதற்கு முன் மிக பிரமாண்டமாக ஒரு பாடல் வெளியீட்டு விழா நடத்திவிட வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி கேட்டு ஓடோடி வந்த விஜய், அன்று மாலையே ஒரு முடிவை எடுத்தார். “பாடல் வெளியீட்டு விழாவுக்கான முன்னேற்பாடுகளை உடனே நிறுத்துங்கள். பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகளை கடைக்கு அனுப்பினால் போதும். பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதுவும் வேண்டாம்,” என்று கூறிவிட்டாராம்.

விஷ்ணு விஷால்: தைரியமாக சொந்தப் படம் தயாரிக்கிறேன்

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வந்த ‘கதாநாயகன்’ படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ‘மாவீரன் கிட்டு’ படத்தை முடித்து விட்டு, புதுமுக இயக்குநர் முருகா னந்தம் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி னார் விஷ்ணு விஷால். கேத்தரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். விஜய் சேது பதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென் னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. படத்துக்கு தலைப்பு வைக்காமல் இருந்தனர். இந்நிலையில், இப்படத்துக்கு ‘கதா நாயகன்’ என பெயரிட்டது படக்குழு.

பிரஜின்: ஐந்தாண்டு போராடி வென்றோம்

அண்மையில் வெளியாகி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிர ஜினைப் பாராட்டத் தவறவில்லை. ஆனால் இந்த ஒரு தகுதிக்கு அவர் கொடுத்த விலையும் அனு பவித்த வலிகளும் அதிகமாம். பிரஜின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களில் பங்கேற்றவர். “அலுவலக வேலை போல போய் கைநிறைய சம்பளம் பெற்று வாழ்ந்தேன். ஆனாலும் ஒரே இடத்தில் தங்கிவிடவில்லை. என் இலக்கு சின்னத்திரை அல்ல பெரியதிரை என்று உணர்ந்துகொண்டேன். திரை வாய்ப்புகளைத் தேடினேன். இன்று ஒருபடத்தின் முழு நாயக னாக வளர்ந்திருக்கிறேன்.

குழந்தைகளுக்கு ஆறுதலாய் அமைந்த கிரிக்கெட் போட்டி

எச்ஐவி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களின் மேம்பாட்டுக்காக வும் நிதி திரட்டும் வகையில் ‘ஜஸ்ட் கிரிக்கெட்’ என்ற போட்டி சென்னையில் நடத்தப்பட்டது. இதில் 32 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடந்த பரிசளிப்பு நிகழ்வில் நடிகர்கள் ஷாம், பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், அசோக், சந்தோஷ், நடிகைகள் சினேகா, சங்கீதா கிரிஷ் ஆகியோர் கலந்துகொண்ட னர். ‘சென்னை 600028’, ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘விழித்திரு’ படக்குழுவினரும் உற்சாகப்படுத்தி னர். இந்நிகழ்வில் சினேகா பந்து வீச பிரசன்னா பேட்டிங் செய்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.

சிருஷ்டி டாங்கே தொடர உள்ள புதிய வழி

தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கப் போவதாக நடிகை சிருஷ்டி டாங்கே தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த படங்கள் தனக்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பதில் அம்மணிக்கு ரொம்பவே வருத்தமாம். “நான் நடித்த ‘தர்மதுரை’ படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்தனர். இதில் சிறிது நேரம்தான் திரையில் வருவேன் என்றாலும் எனது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்தப் பாத்திரம் ரசிகர்கள் மனதை தொட்டது. அதே வழியைத் தொடர உள்ளேன்,” என்கிறார் சிருஷ்டி.

நட்ராஜ் நடிப்பில் உருவாகிறது ‘எங்கிட்ட மோதாதே’

நட்ராஜ் சுப்ரமணியம் நாயகனாக நடிக்கும் படம் ‘எங்கிட்ட மோதாதே’. பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி நாயகிகள். “1980களில் நடிகர் ரஜினி, கமலின் ரசிகர்களுக்கி டையே மோதல் போக்கு இருந்தது. இதை மையமாக வைத்துத்தான் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். நட்ராஜ் ரஜினி ரசிகராகவும், மூடர் கூடம் ராஜாஜி கமல் ரசிகராகவும் நடித்திருக்கி றார்கள்,” என்கிறார் இயக்குநர் ராமு செல்லப்பா.

காதல் அலையில் சிக்கித் தவிக்கும் நடிகையின் கதை

பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் ‘மோகனா’. இதில் மொட்டை ராஜேந்திரன், கல்யாணி நாயர், உமா, ஹரீஷ், மோரா, மும்பை சீனுஜி ஆகியோரும் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குபவர் ஆர்.ஏ. ஆனந்த். இவர் ஏற்கெனவே ‘செவிலி’ என்ற படத்தை இயக்கியவர். நாடகத் துறை கலைஞர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்பதைப் பற்றி விரிவாக எடுத் துக் கூறியுள்ளாராம். “மோகனா எனும் நாடக நடிகையை, நடிகராக வரும் ‘பவர் ஸ்டார்’ ஒருதலையாகக் காதலிக் கிறார். அதே சமயம் பண்ணையார் மொட்டை ராஜேந்திரனும் அந்த நடிகை மீது உயிரையே வைத்திருக்கிறார்.

Pages