ஆந்திரா

ஹைதராபாத்: ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு வருகிற 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
திருப்பதி: தெலுங்கு தேசக் கட்சியின் தேர்தல் பிரசார வாகனம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சிலர் தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர். அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.
திருமலை: ஆந்திர மாநிலத்தில் வருகிற மே 13-ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானத்தை வழங்குவோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார்.
திருப்பதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் அனந்தபூர் அடுத்த குட்டி பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பறந்து வந்த செருப்பு ஜெகன்மோகன் ரெட்டியை தாண்டி சென்று விழுந்தது.