You are here

விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர்

லண்டன்: இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள மதுபானக்கூடத்துக்கு வெளியே நடந்த சண்டை தொடர்பான வழக்கில் அந்நாட்டின் கிரிக்கெட் நட்சத்திரமான பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்தக் கைகலப்பு நிகழ்ந்தது. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பென் ஸ்டோக்ஸ் மறுத்ததை அடுத்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. பிரிஸ்டல் கிரௌன் நீதிமன்றத்தில் ஆறு நாள் வழக்கு விசாரணை நடைபெற்றது. சம்பவம் நடந்தபோது ஸ்டோக்ஸ் குடிபோதையில் இருந்ததாகவும் கோபத்தின் உச்சத்தில் இருந்ததாகவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் டாவிட் சில்வா

மட்ரிட்: அனைத்துலகக் காற்பந்துப் போட்டி களிலிருந்து ஸ்பெயின் குழுவின் டாவிட் சில்வா (படம்) ஒய்வுபெற்று உள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றி யாளரான மான்செஸ்டர் சிட்டியில் அவர் தொடர்ந்து விளையாடு வார். 2008ஆம் ஆண்டி லிருந்து 2012ஆம் ஆண்டு வரை ஸ்பெ யின் மூன்று பிரதான பட்டங்களை அடுத் தடுத்து வென்றது. ஸ் பெ யி னு க் கு ப் பெருமை சேர்த்த அக்குழுவில் சில்வாவும் இடம்பெற்றிருந்தார். ஸ்பெயினுக்காக விளையாடி உலகக் கிண்ணம் மற்றும் ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் சில்வா.

மண்ணைக் கவ்வியது இந்திய அணி

லண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் இந்தியா படு தோல்வியைச் சந்தித்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ஓட்டங்கள் எடுத்தது. இங்கி லாந்து 7 விக்கெட்டுகளுக்கு 396 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 289 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்தியா 130 ஒட்டங்களுக்குள் சுருண்டது. மழை காரணமாக ஆட்டம் இருமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.

சிட்டி வீரர்களுக்குப் புகழாரம் சூட்டிய கார்டியோலா

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி புதிய பருவத்தை வெற்றி யுடன் தொடங்கி உள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனலை அது சந்தித்தது. இந்த ஆட்டம் ஆர்சனலின் எமிரேட்ஸ் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய சிட்டி 2=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டர்லிங்கும் 64வது நிமிடத்தில் பெர்னாடோ சில்வாவும் சிட்டிக்காக கோல் போட்டனர். சிட்டியின் வீரர்கள் பலர் அண்மையில் ரஷ்யாவில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டியில் விளையாடி இருந்தனர்.

எவர்ட்டன் வெற்றியை தடுத்த உல்வ்ஸ் அணி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்கள் நேற்று தொடங்கிய நிலையில் எவர்ட்டன் குழுவைச் சந்தித்த உல்வர்ஹேம் டன் ரோவர்ஸ் அணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எவர்ட்டன் அணி யின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியது. புதிய பருவத்தில் பிரேசிலிய மத்திய திடல் வீரரான ரிச்சர்லிசன் என்பவரை எவர்ட்டன் குழு வாங் கியது. அதற்காகக் கொடுக்கப் பட்ட 50 மில்லியன் பவுண்ட்கள் பலருக்கு வியப்பை ஊட்டின. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் எவர்ட்டன் சார்பாக அவர் இரண்டு கோல்கள் போட்டது எவர்ட்டன் நிர்வாகியான மார்க்கோ சில்வா அவர் மீது வைத்த நம்பிக்கையை நிரூபணம் செய்தது.

இரண்டாவது டெஸ்ட் முடிவை மழை தீர்மானிக்கும்

இங்கிலாந்து=இந்தியா இடையி லான 2=வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து செய் யப்பட்ட நிலையில் இரண்டாம் நாளில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியா மல் 107 ஓட்டங்களில் இந்தியா சுருண்டது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து மளமளவென ஓட்டங் களைக் குவித்தது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப் பிற்கு 357 ஓட்டங்களைக் குவித் திருந்தது. 4ஆம் நாளான நேற்று ஆட்டம் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்பெயின் வீரர் பிக்கே ஓய்வு

ஸ்பெயின் காற்பந்து அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜெரர்ட் பிக்கே (படம்) அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். 31 வயது மத்திய தற்காப்பு ஆட் டக்காரரான பிக்கே, 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணியில் இடம்பெற்று இருந்தவர். மேலும் 2012 ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண வெற்றியிலும் இவ ருக்குப் பங்குண்டு. பிக்கே கடந்த மாதம் முடிவுற்ற உலகக் கிண்ண ஆட்டங்களில் பங்கேற்று ஆடினார். ஆனாலும் பெரிய அளவில் முன்னேற்றம் காணமுடியாமல் ஸ்பெயின் அணி காலிறுதிச் சுற்றோடு வெளியேறியது.

அசுர பலத்துடன் விளையாடிய பால் போக்பா

மான்செஸ்டர்: இந்தப் பருவத்துக் கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியை மான் செஸ்டர் யுனைடெட் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நேற்று அதிகாலை தனது சொந்த விளையாட்டரங்கமான ஓல்ட் டிராஃபர்ட்டில் லெஸ்டர் சிட்டியை அது 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

கடந்த பருவத்தில் லீக் பட்டியலில் யுனைடெட் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்தப் பருவத்தில் லீக் பட்டத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று அக்குழு வுக்கு இருக்கும் முனைப்பு நேற்றைய ஆட்டத்தில் பிரதி பலித்தது.

அரையிறுதியில் ஹாலெப், நடால்

மாண்ட்ரியல்: ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும் ஸ்பெயி னின் ரஃபயேல் நடாலும் தகுதி பெற்றுள்ளனர். கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தரநிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு 3ஆம் சுற்று ஆட்டத்தில் ஹாலெப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சைத் தோற் கடித்துக் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை கரோலினா கார்சியாவை ஹாலெப் எதிர்கொண்டார்.

கார்டியோலாவிற்கு எதிராக தயாராகும் உனை எம்ரி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரின் தனது முதல் ஆட்டத்தில் ஆர்சனலை எதிர்கொள்கிறது மான்செஸ்டர் சிட்டி. நாளை இரவு 11 மணிக்கு ஆர்சனலின் சொந்த அரங்கில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. சிட்டி குழுவின் முக்கிய வீரர்கள் சிலர் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. என்றாலும் பருவத்திற்கு முந் திய நட்புமுறை ஆட்டத்தில் அக் குழுவினர் சிறந்த முறையிலேயே விளையாடினர்.

Pages