2022: சிங்கப்பூரில் வெப்பமும் மழையும் அதிகம்

சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளில் ஆக அதிக மழை பெய்த ஆண்டுகளில் சென்ற ஆண்டும் ஒன்று. 2022ல் இரண்டு மாதங்களில் வரலாறு காணாத அளவு மழையும் பெய்தது; அதேபோல் இரண்டு மாதங்களில் ஆக அதிக வெப்பம் நிலவியது.

கடந்த 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக அதிக மழை பெய்த ஆண்டுகளின் பட்டியலில் சென்ற ஆண்டு ஆறாவது இடத்தில் உள்ளதாக வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

தென்கிழக்காசியாவில் அதிக மழை பெய்யக் காரணமான லா நினா இயற்கை நிகழ்வும் இதற்கொரு காரணம்.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு முழுவதும் பெய்த சராசரி மழையின் அளவு, 1991 முதல் 2020 வரையிலான சராசரியைவிட 19 விழுக்காடு அதிகம் எனக் கூறப்பட்டது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 412 மில்லிமீட்டர் மழை பெய்தது. அது 40 ஆண்டுகளில் ஆக அதிக மழை என்றும் சென்ற ஆண்டு மே மாதம்  வெப்பநிலை ஆக அதிகமாக 36.7 டிகிரி செல்சியஸ் பதிவானதாகவும் வானிலை ஆய்வகம் கூறியது. 

சென்ற ஆண்டு மொத்தம் 210 நாள்கள் மழை பெய்தது.

இருப்பினும், சென்ற ஆண்டின் சராசரி வெப்பநிலை,  1929க்குப் பிறகு 10வது ஆக அதிகமான வெப்பநிலை என்றும் சிங்கப்பூரின் வெப்பநிலைப் போக்கு உலகெங்கும் பதிவாகும் வெப்பநிலைக்கு ஏற்பவே இருப்பதாகவும் ஆய்வகம் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!