சிங்கப்பூரிலிருந்து லண்டன் புறப்பட்ட குவாண்டஸ் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது

சிங்கப்பூரிருந்து  லண்டனுக்குச் செல்லும் குவாண்டஸ் விமானம், ஏதோ ஓர் அவசரநிலையால் அஸர்பைஜானின் தலைநகர் பக்குவில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.  

அவசரநிலைக்கான காரணம் தெரியவில்லை. 

ஏர்பஸ் ஏ380 ரக விமானமான கியூஎஃப்1 (QF1), 2009 ஆகஸ்ட்டில் அதன் சேவையைத் தொடங்கியது. 

வெள்ளிக்கிழமை (டிச. 23) அதிகாலை 12.44 மணிக்கு சாங்கி விமான நிலையத்திலிருந்து  விமானம் புறப்பட்டது.

விமானம் புறப்பட 49 நிமிடத் தாமதம் ஆனது. 

சிங்கப்பூர் நேரப்படி காலை 10.15 மணிக்கு விமானம் அவசரநிலைக்கான 7700 எனும் குறியீட்டைத் தெரிவிக்கத் தொடங்கியது. விமானப் பயணங்களைக்  கண்காணிக்கும் பல்வேறு இணையத்தளங்கள் இதைக் குறிப்பிட்டன. 

ஜியார்ஜியா தலைநகர்  டிப்ஆலிசி அருகே உள்ள ஆகாயவெளியில் விமானம் வந்த வழியே திரும்பிச் சென்றது. 

சிங்கப்பூர் நேரப்படி காலை 11.07 மணிக்கு பக்குவில் உள்ள ஹெய்டர் அலியெவ் அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. 

இச்சம்பவம் பற்றி குவாண்டஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. 

இச்செய்தி பற்றிய மேல்விவரங்கள் கிடைத்தவுடன் தமிழ் முரசு தெரிவிக்கும். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!