விபத்தில் சிக்கி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மீண்டும் விபத்து; எட்டு பேர் உயிரிழப்பு

அவசர மருத்துவ வாகனமும் மீன் ஏற்றிச் சென்ற லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் எண்மர் மரணமடைந்தனர். இந்தியாவின் கேரள மாநிலம், தனிசேரியில் நேற்று முன்தினம் பிற்பகலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பட்டாம்பியைச் சேர்ந்த சிலர் நெல்லியம்பதிக்கு காரில் சென்ற போது விபத்து நிகழ்ந்தது. அந்த விபத்தில் காயமடைந்த ஐவருக்கு நென்மாராவில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.

அவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தது பற்றி தகவல் கிட்டியதும் உறவினர்கள் சிலர் நென்மாராவிற்கு விரைந்தனர்.

அதன்பின், மேல்சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் அவசர மருத்துவ வாகனம் மூலம் பாலக் காட்டிற்கு விரைந்தனர். இந்நிலை யில் அந்த அவசர மருத்துவ வாகனமும் விபத்துக்குள்ளானது. 

இந்நிலையில், அவசர மருத் துவ வாகனம் விபத்துக்குள்ளான தில் அதன் ஓட்டுநர் உட்பட எண்மர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 17 முதல் 45 வயதுக் குட்பட்ட ஆண்கள்.  லாரி ஓட்டுநர் உட்பட மேலும் நால்வர் காயம் அடைந்தனர். 

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிட மாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சாலையின் வளைவுப் பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது அவசர மருத்துவ வாகனத்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த தால் எதிரில் வந்த லாரியின் மீது மோதியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

இதனிடையே, விபத்தில் மாண் டவர்களின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் நிதியுதவி அளிக்கும் என்று கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித் துள்ளார். அத்துடன், அவர்களுக் குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும் அவர் உத்தர விட்டார்.