பாலித் தீவில் இரட்டைத் தலைப் பாம்பு

இந்தோனீசியாவின் பாலித் தீவில்  இரட்டைத் தலைப் பாம்பு காணப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவரும் பாம்பின் படங்களும் காணொளிகளும் இணையவாசிகளை மலைக்க வைக்கின்றன. 

இந்த வினோதப் பாம்பு இந்தோனீசியாவின் மத்தியப் பகுதியில் அவ்வப்போது காணப்பட்டு வருகிறது. உள்ளங்கையில் அடங்கக்கூடிய அளவிற்குச் சிறிதான அந்தப் பாம்பு, வாழையிலையின்மீது வளைந்து நெளிந்து செல்வதையும் அதனைச் சுற்றி சிறார்கள் சிலர் நின்று பார்ப்பதையும் இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி காட்டுகிறது.

இரட்டைத் தலைப் பாம்புகள் இயற்கைச் சூழலில் காண்பது அரிது எனக் கூறும் விலங்கு நிபுணர்கள், அவை பொரும்பாலும் அடைக்கப்பட்ட சூழலில் பிறந்து வளர்வதாகக் கூறுகின்றனர்.