சிங்கப்பூரில் காற்றுத்தரம் மோசமாகலாம்

சிங்கப்பூரின் காற்றுத்தரம்  கடந்த சில நாட்களில் இருந்ததுபோல்  தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் அது மேலும் மோசமாகி சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பும் உள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. 

புகைமூட்டம் மோசமாகி வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஆலோசனை விடுத்துள்ளனர்.

Property field_caption_text
சிங்கப்பூரின் மத்தியப் பகுதியிலுள்ள பீஷானில் எடுக்கப்பட்ட படத்தில் சிறிதளவு புகைமூட்டம் தென்படுகிறது. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

காற்றுத்தரக் குறியீடு (பிஎஸ்ஐ) அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான அளவில் இருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. ஆயினும், இந்தோனீசியாவில் புகைமூட்டம் பெருகி அந்தப் புகையைக் காற்று சிங்கப்பூருக்குத் தள்ளினால்  இங்குள்ள புகைமூட்டம் மோசமாகலாம்.

தற்போது 51க்கும் 100க்கும் இடைப்பட்டிருக்கும் காற்றுத்தரக் குறியீடு மிதமான அளவில் இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கான 24 மணி நேர பிஎஸ்ஐ இந்த அளவில் இருந்து வந்துள்ளது.

Property field_caption_text
புகைமூட்டம் சூழ்ந்த நகரக்காட்சியை எதிர்நோக்கும் மாடத்தின்முன் தம்பதியர் இருவர் அமர்ந்தவண்ணம் உள்ளனர். (படம்: ராய்ட்டர்ஸ்)

101க்கும் 200க்கும் இடைப்பட்டுள்ள பிஎஸ்ஐ, சுகாதாரத்திற்குக் கெடுதலை விளைவிக்கக்கூடிய காற்றுத்தரத்தைப் பிரதிபலிக்கிறது. சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் இவ்வாரம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று மணிக்குப் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்ஐ 99ஆக இருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!