சிங்கப்பூர் போலிஸ் படையின் மின்னிலக்க அவதாரமான இன்ஸ்பெக்டர் கிளிஃப்

சிங்கப்பூரின் ஆகப் புதிய போலிஸ் அதிகாரியாக இன்ஸ்பெக்டர் கிளிஃப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். 24 மணி நேரமும் சேவையாற்றும் இன்ஸ்பெக்டர் கிளிஃப், சிங்கப்பூர் போலிஸ் படையின் ஊடகப் பிரிவால் உருவாக்கப்பட்ட மின்னிலக்க போலிஸ் அதிகாரி.

இக்காலகட்டத்தில் பலர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் குற்றத் தடுப்பு, சிங்கப்பூரில் உள்ள மற்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் ஆகியவை பற்றி இணையவாசி

களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இன்ஸ்பெக்டர் கிளிஃப் உருவாக்கப்பட்டுள்ளார் என்று சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று தெரிவித்தது.

இன்ஸ்பெக்டர் கிளிஃப் கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று முதன்முதலாக ஃபேஸ்புக்கில் தோன்றினார். மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி, மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது போன்ற முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

அதுமட்டுமல்லாது, போலிஸ் அதிகாரிகளின் அன்றாடப் பணிகள் குறித்தும் அவர் பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தற்போது ரயில் நிலையங்களில் உள்ள வரைபடத்துக்குப் பதிலாக இந்தப் புதிய படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மாற்றப்படும் என்றது ஆணையம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

11 Dec 2019

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை ஜனவரியில் திறப்பு; முதல் 3 நாட்களுக்கு இலவச பயணம்

காலை 10 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பகல் 12 மணியளவில் முற்றாக அணைக்கப்பட்டதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது. படங்கள்: எஸ்சிடிஎஃப் /ஃபேஸ்புக்

11 Dec 2019

துவாஸில் ஆறு மணி நேரம் பற்றி எரிந்த தீ