கொரோனா:  சமூக அளவில் புதிதாக 11 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக 322 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. இவர்களுடன் சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46, 283க்கு அதிகரித்துள்ளது.

பதினோரு பேர் புதிதாக சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும் எஞ்சியுள்ளோர் வேலை அட்டைதாரர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து ஐந்து பேர் இக்கிருமியைத் தொற்றியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.