‘வெளிநாட்டினர் - குடிமக்கள் விகிதம்: நிறுவனங்களில் வரையறை வேண்டும்’

நிறு­வ­னங் ­களில் வேலைக்கு அமர்த்­தப்­படும் வெளி­நாட்­ டி­னர் - குடி­மக்­கள் விகி­தத்­துக்கு நிறுவனங் களில் உட­ன­டி­யாக வரை­யறை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­றும் அப்­போ­து­தான் அங்கு ஊழி­யர்­க­ளி­டையே சம­நிலை உண்­டா­கும் என்­றும் தொகுதி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் வாய் மன் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் இடையே நிறுவனங் களில் பாகு­பாடு காட்­டப்­ப­டு­கிறது என்று சிங்­கப்­பூ­ரர்­கள் குரல் எழுப்­பி­யி­ருக்­கும் வேளை­யில், சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யைப் பிர­தி­நி­திக்­கும் திரு லியோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பி­னார்.

இதற்குத் தீர்வு காணும் பொருட்டு, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் வேலை அனு­ம­திச் சீட்டு ஒப்­பு­த­லை­யும் புதுப்­பிப்­பை­யும் அர­சாங்­கம் குறைக்க வேண்­டும். அப்­போ­து­தான் அந்த வேலை­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குக் கிடைக்­கும் என்­றும் திரு லியோங் கூறி­னார்.

“ஊழி­ய­ர­ணி­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­களை அதி­க­மாக சேர்த்­துக்­கொள்­வ­தற்கு அர­சாங்­கத்­துக்கு நல்ல கார­ணங்­கள் இருக்­க­லாம். ஆனால் அது நமது உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்­குப் பாத­க­மாக இருந்­து­வி­டக்­கூ­டாது. தங்­கள் சொந்த நாட்­டில் வேலை­க­ளுக்கு கடு­மை­யாக சிங்­கப்­பூ­ரர்­கள் போட்­டி­யிடும்போது அது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும்.

“சிங்­கப்­பூ­ரில் வேலை­யில் இருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பான தர­வு­களை அர­சாங்­கம் வெளிப்­

ப­டை­யா­கத் தெரி­விக்­க­லாம்.

“உதா­ர­ணத்­துக்கு, நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் பிரி­வில் உள்ள வேலை­களில் எத்­தனை சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் இருக்கிறார்கள். வெளி­நாட்­ டி­னர் எந்­தெந்த நாடு­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­கள் போன்­ற புள்ளி விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­லாம்.

“தெளி­வான தக­வல் இல்­லா­மல், இங்கு வேலை செய்­யும் வெளி­நாட்­டி­ன­ரால் நமக்கு நன்மை ஏற்­ப­டு­கி­றதா என்று சிங்­கப்­பூ­ரர்­க­ளால் உணர்ந்­து­கொள்ள முடி­யா­மல் போகிறது,” என்­றும் திரு லியோங் வலி­யு­றுத்­தி­னார்.

“நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­களை சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யில் சேர்த்துக்கொள்ள அவர்­க­ளுக்கு நீண்ட வேலை அனு­ப­வம் உள்­ளதா என்­ப­தைப் பார்க்க வேண்­டும்.

“சிங்­கப்­பூ­ரில் அதிக காலம் வசிக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்கே குடி­மக்­க­ளா­கும் தகுதி வழங்­கப்­பட வேண்­டும். அதற்கு அவர்­கள் குடி­மக்­கள் ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கை­களில் அதி­கம் பங்­கேற்­ற­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.

“வெளி­நாட்­டி­ன­ருக்கு குடி­யு­ரிமை முறை­யாக வழங்­கப்­ப­டு­வதை உறுதி செய்ய குடி­மக்­கள் ஆணை­யம் என்ற அமைப்பு அமைக்­கப்­பட வேண்­டும்,” என்பது போன்ற யோச­னை­களை திரு லியோங் முன்­வைத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!