மூன்றே மாதங்களில் ஐந்தில் இருவர் மீண்டும் வேலை பெற்றனர்

கொரோன கிருமித்தொற்று பாதிப்பு இருந்தபோதிலும் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனங்கள் தொடர்ந்து வேலைக்கு ஊழியர்களை சேர்ப்பதில் ஈடுபட்டிருந்ததாக மனிதவள அமைச்சு கூறியுள்ளது.

ஊழியர்களை சேர்ப்பதில் நிறுவனங்கள் சற்று மெதுவான போக்கைக் கடைப்பிடித்தாலும், ஆட்சேர்ப்பு தொடர்ந்து நடைெபறுவதாக அது விளக்கியது.

இதன் தொடர்பில் அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் வேலையிழந்தோரில் 39 விழுக்காட்டினர், அதாவது 5ல் இருவருக்கு, ஜூன் மாதத்துக்குள் மாற்று வேலை கிடைத்ததாக அது கூறியது.

இது 2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்திலான 47 விழுக்காடுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு.

எனினும், வேலைக்கு ஆட்சேர்ப்பதில் மிதமான போக்கு தென்பட்ட போதிலும், மீண்டும் வேலைக்கு சேர்ந்தோருக்கு பெருமளவு சம்பள குறைப்பு இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக மனிதவள அமைச்சர் திருவாட்டி ஜோசஃபின் டியோ தமது வாராந்தர வேலை தொடர்பான அறிக்கையில் நேற்று தெரிவித்தார்.

மனிதவள அமைச்சு ஜூன் மாதம் மேற்கொண்ட இந்த ஆய்வில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் என மொத்தம் 2,160 பேர் பங்கேற்றனர்.

“ஆட்சேர்ப்பது குைறந்துள்ளதுதான், ஆனால் ெபரிய வீழ்ச்சி இல்லை. இனி என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய, இந்தப் பிரிவினரை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

“ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், 2018ஆம் ஆண்டு போன்ற நல்ல பொருளியல் சூழல் நிலவிய காலத்திலும், வேலையிழந்தோருக்கு மீண்டும் வேலை கிடைப்பதற்கு சிறிது காலம் பிடிக்கலாம்,” என்று நேற்று மரினா பே சேண்ட்ஸில் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ஜூன் மாதத்துக்குள் ேவலை கிடைத்தோரில் 60 விழுக்காட்டினருக்கு 5 விழுக்காட்டுக்கும் குறைவான சம்பள வெட்டு இருந்ததாகக் கூறினார்.

அத்துடன், கிட்டத்தட்ட பாதிப் பேர், அதாவது 53 விழுக்காட்டினர், வேறு துறையைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார்.

மேலும், 10ல் எழுவருக்கு வேலையிழந்த ஒரு மாதத்துக்குள் புதிய வேலை கிடைத்ததாக அவர் சொன்னார்.

வேலையிழந்தோரில் 30லிருந்து 40 வயதுகளில் உள்ள நிபுணத்துவ திறன் பெற்றோர், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கு புதிய வேலை கிடைக்கும் சாத்தியம் அதிகம் என்றும் அமைச்சு கூறியது. எனினும், இது குறித்த மேல் விவரங்களை அது தெரிவிக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!