லிட்டில் இந்தியா வர்த்தகர்களின் நம்பிக்கை ஒளிவிளக்கு

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தமிழர்களின் பொதுவான நம்பிக்கை. ஆனால், கடந்த சில மாதங்களாக கொரோனா நெருக்கடியால் வர்த்தகம் பெரிதும் சரிந்துவிட்ட நிலையில், அந்த நல்லகாலம் இப்போதே பிறந்துவிடாதா என்பதே லிட்டில் இந்தியா வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், அவர்களுக்குப் பொங்கல் திருநாளைப் போல தீபாவளியும் மிக முக்கியமான காலகட்டம்.

ஒவ்­வோர் ஆண்­டும் தீபா­வ­ளிப் பண்­டி­கைக் காலத்­திற்­காக லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள் எதிர்­பார்த்து காத்­தி­ருப்­பர். உள்­ளூர்­வா­சி­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள், சுற்­று­லாப் பய­ணி­கள் என மக்­கள் கூட்­டம் அங்கு நிரம்பி வழிய, தீபா­வளி விற்­பனை சூடு­பி­டிக்­கும்.

ஆனால், கொவிட்-19 நோய்ப் பர­வ­லா­லும் கட்­டுப்­பா­டு­க­ளா­லும் வர்த்­த­கம் வழக்­கம்போல் இருக்­காது என்­பதை கடைக்­கா­ரர்­கள் அறிந்திருக்கின்றனர்.

மக்­க­ளின் பாது­காப்பு கருதி, இம்­முறை கிண்டா சாலை­யில் தீபா­வளி விற்­ப­னைச் சந்தை இராது என்­றா­லும் இர­வில் வண்­ண­ம­ய­மாக ஒளி­ரும் சாலை­கள் பண்­டிகை உணர்­வை ஏற்படுத்தி, உற்­சா­க­ம் அளிப்­ப­தாக அமைந்­துள்­ளன.

இத்தகைய சூழலில் லிட்டில் இந்தியாவில் தீபாவளி விற்பனை எப்படி இருக்கிறது என்பதை அங்குள்ள கடைக்காரர்களிடம் பேசி அறிந்து வந்தது தமிழ் முரசு.

மலே­சிய வாடிக்­கை­யா­ளர்­கள் வர முடி­யா­த­தால் வருத்­தம்

பெரும்­பான்­மை­யான மலே­சியா வாடிக்­கை­யா­ளர்­களை இம்­முறை காண முடி­ய­வில்­லையே என்ற ஏக்­கம் பல கடைக்­காரர்­க­ளி­டம் தென்­பட்­டது.

கட்­டுப்­ப­டி­யான விலை­யில், பற்­பல வடி­வ­மைப்­பு­களில் வரும் பாரம்­பரிய ஆடை­களை தேக்கா சந்­தைக்கு வந்து விரும்பி வாங்­கிச் செல்­லும் மலே­சிய வாடிக்­கை­யாளர்­கள் எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளால் தற்­போது இங்கு வர இய­லாது.

அத­னால் இம்­முறை விற்­ப­னை­யில் அதிக பாதிப்பு இருக்­கும் என்­றார் ‘சகினா ஃபேஷன்ஸ்’ கடை­ஊழி­ய­ரான திரு ப.தமி­ழ­ர­சன், 31.

“எங்­க­ளது வியா­பா­ரம் பெரும்­பா­லும் மலே­சிய வாடிக்­கை­யா­ளர்­களையே நம்­பி­யுள்­ளது. உள்­ளூர்­வா­சி­கள் பெரும்­பா­லும் இணை­யம் வழி நவீன உடை­களை தங்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு வாங்கி விடு­கின்­றனர். வெளி­நாட்­டி­லி­ருந்து பொருள்­களை இறக்­கு­மதி செய்­யும் விலை­யும் சற்று அதி­க­ரித்­துள்­ள­தால் சற்று சிர­ம­மா­கத்­தான் உள்­ளது,” என்று கவ­லை­யு­டன் சொன்­னார் பாரம்­பரிய சிறு­வர் உடை­களை விற்­கும் ‘பவானி காஸ்ட்­யூம்ஸ்’ கடை­யின் உரி­மை­யா­ளர் திரு­மதி வசந்தா சுதர்­ச­னன், 58.

மாறாக, தமது கடை­யில் 90% வாடிக்­கை­யா­ளர்­கள் உள்­ளூர்­வாசி­கள் என்­ப­தால் இம்­முறை தீபா­வளி விற்­ப­னை­யில் அதிக பாதிப்பு இருக்­காது என்று கூறி­னார் ‘ஜூவல் பேலஸ்’ கடை­யின் நிர்­வாக இயக்­கு­நர் திரு முகம்­மது நஜு­மு­தீன்.

தற்­போ­தைய பொரு­ளியல் சூழ­லில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வாங்­கும் திறன் குறைந்­தி­ருந்­தா­லும், பண்­டி­கைக்காக தங்­களுக்கு வேண்­டிய பொருள்­க­ளை வாங்­கிச் செல்­கின்­ற­னர் என அவர் சுட்­டி­னார்.

“எடுத்­துக்­காட்­டாக, $500 மதிப்­புள்ள ஆடை­களை வாங்­கி­ய­வர் இம்­முறை $350க்குச் செல­வு­களைக் குறைத்­தி­ருப்­பார். வரும் மாதங்­களில் கொரோனா கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட, சமூக, மங்­கல நிகழ்ச்­சி­கள் அதி­க­மாக இடம்­பெ­றும். அப்­போது வர்த்­த­க­மும் கூடும்,” என்று திரு நஜு­மு­தீன் நம்­பு­கி­றார்.

தாக்­குப்­பி­டிக்­கும் தையல் தொழில்

கடந்த மார்ச் மாதத்­தில் இந்­தியா சென்ற சக தையல்­கா­ரர் இன்­னும் திரும்­பா­த­தால் ஆள் பற்­றாக்­குறை நில­வு­கிறது என்­றார் ‘பவானி காஸ்ட்­யூம்ஸ்’ கடை­யில் தையல் பணியை மேற்­கொள்­ளும் திரு ரா. சாமி­நா­தன், 42.

தீபா­வ­ளிக்­காக துணி தைக்­கும் வாடிக்­கை­யா­ளர்­கள் தொடர்ச்­சி­யாக வந்த வண்­ணம் உள்­ள­னர் என்று குறிப்­பிட்ட அவர், பெரும்­பா­லா­னோர் வழக்­க­மான வாடிக்­கை­யாளர்­கள்தான் என்­றார்.

‘இமா­னு­வல் ஃபே‌‌ஷன்’ தையல், ஆடைக் கடை­க­ளின் உரி­மை­யா­ள­ரான திரு­மதி புனிதா தாஸ், 47, தையல் வியா­பா­ரம் ஓர­ளவு தாக்­குப்­பி­டிக்­கிறது என்­றா­லும் ஆடை விற்­ப­னைக்கு வார­யிறுதியில் வரும் வாடிக்­கை­யா­ளர்­களையே பெரி­தும் நம்­பி­யுள்­ள­தா­கச் சொன்­னார்.

பெரும்­பா­லும் பல கடை­களும் வெளி­நாட்­டில் இருந்தே பாரம்­ப­ரிய உடை­களை இறக்­கு­மதி செய்ய, ‘லிபாஸ் ஃபேஷன்ஸ்’ கடை உள்­ளூ­ரில் இருந்­த­வாறே வாடிக்­கை­யா­ளர்­க­ளின் விருப்­பத்­திற்கு ஏற்ப பாரம்­ப­ரிய உடை­களை தைத்­துத் தரு­கிறது. எடுத்­துக்­காட்­டாக, ஆண் வாடிக்­கை­யா­ளர் ஒரு­வர் தமக்­குப் பிடித்த நிறத்­தை­யும் வடி­வ­மைப்­பை­யும் தேர்வு செய்ய, அவ­ரின் உடல் அளவு எடுக்­கப்­பட்டு சில நாள்­களி­லேயே தனித்­துவ பாரம்­ப­ரிய உடை தயா­ரா­கி­வி­டு­கிறது.

இந்­திய-மேற்­கத்­திய பாணி­கள் கலந்த பாரம்­ப­ரிய உடை­க­ளுக்கு உள்­ளூர் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பு இருப்­பதால் அதில் கவ­னம் செலுத்தி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார் ‘லிபாஸ் ஃபேஷன்ஸ்’ கடை­யின் உரி­மை­யா­ளர் திரு நதீம்.

‘உள்ளூர்வாசிகள் ஆதரவு தேவை’

ஜூன் மாதத்­தி­லி­ருந்து இரண்­டாம் கட்­ட­மாக கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட, தமது வழக்­க­மான வாடிக்­கை­யா­ளர்­கள் கடைக்­குத் திரும்­பு­வது அதி­க­ரித்து வரு­கிறது என்று ‘காஸ்ட்­யூம் ஜுவல்­லரி’ விற்­ப­னை­யில் ஈடு­பட்டுள்ள ‘சுஜி ஜுவல்­லரி’ கடை­யின் உரி­மை­யா­ளர் திரு

க.குண­சே­க­ரன், 57, தெரி­வித்­தார்.

கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் மேம்­பட்டு வர, தீபா­வளி கொண்­டாட்­டம் சிறப்­பாக அமை­யும் என்ற நம்பிக்கையில் இவர் இந்­தி­யா­வி­ல் இ­ருந்து புது­ரக ‘நெக்­லஸ்’, வளை­யல், தோடு வகை­களை இறக்­கு­மதி செய்­துள்­ளார்.

“இக்­கட்­டான கால­கட்­டம் என்­றா­லும் முடிந்­த­வ­ரை தீபாவளியைச் சிறப்­பா­கக் கொண்­டாட வேண்­டும் என்றே பல­ரும் நினைப்­பர். மலே­சிய வாடிக்­கை­யாளர்­கள் இல்­லாத நிலை­யில், உள்­ளூ­ர்வாசிகள் ஆதரவு நல்­கி­னாலே போது­மா­னது,” என்றார் திரு குண­சே­க­ரன்.

லிட்டில் இந்தியா ஆர்க்கேட்

தற்­போது லிட்­டில் இந்­தியா ஆர்க்­கேட்­டி­னுள் நுழைய, ஒரு­வர் ‘சேஃப் என்ட்ரி’ மின்­னி­லக்க வரு­கைப்­பதிவைப் பூர்த்­தி­செய்­வ­தோடு உடல் வெப்­ப­நி­லைப் பரி­சோ­த­னை­யை­யும் மேற்­கொள்ள வேண்­டும்.

இது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அசெ­ள­க­ரி­யத்தை தரக்­கூ­டும் என்­றும் கேம்­பல் லேனை ஒப்­பி­டு­கை­யில் குறைந்த எண்­ணிக்­கை­யில்­தான் வாடிக்­கை­யா­ளர்­கள் லிட்­டில் இந்­தியா ஆர்க்­கேட்­டிற்கு வரு­கின்­றனர் என்றும் சொன்னார் அங்கு செயல்­படும் ‘காஸ்ட்­யூம் ஜுவல்­லரி’ கடை­யின் ஊழி­ய­ர் ஒரு­வர்.

பண்­டி­கைக் காலத்­தில் கேம்­பல் லேன் வழி­யான இணைப்புப் பாதை­யி­லும் மக்­கள் லிட்­டில் இந்­தியா ஆர்க்­கேட்­டி­னுள்­ நு­ழைய ஏற்­பாடு செய்­தால் அது அங்­கி­ருக்­கும் எல்லா வர்த்­த­கங்­க­ளுக்­கும் உதவி­யாக இருக்­கும் என்­றார்.

கொரோனா தாக்­கத்­தால் இம்­முறை 20% வரை விற்­பனை குறை­ய­லாம் என்று கணே­சன் விலாஸ் தின்பண்டக் கடை­யின் உரி­மை­யா­ள­ரான திரு எஸ்.சுகு­மா­றன், 32, கூறினார்.

எது எப்படி இருந்தாலும், மக்கள் தீபாவளியைக் கொண்டாடத் தவற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், இன்னும் ஒரு மாதம் இருப்பதால் வரும் நாள்களில் வாடிக்கையாளர் வருகை அதிகமாக இருக்கும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!