ஸ்ரீ நாராயண மிஷன் ஊழியர் 145 பேருக்கு தடுப்பூசி

ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லவாசிகளுக்கு பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் அதன் பலன்களையும் அறிவியல் ஆதாரத்துடன் இல்லவாசிகளின் அன்புக்குரியோருக்கு விளக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு மேலும் நம்பிக்கையூட்டும் வகையில் முதலில் இல்ல ஊழியர்கள் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

“ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களில் 70 விழுக்காட்டினர் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள். கொரோனா கிருமியால் அதிகம் பாதிக்கப்படுவோர் முதியோராக இருப்பதால், ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது முதியோர், ஊழியர்கள் இருதரப்பினரதும் பாதுகாப்புக்கும் அத்தியாவசியமானது,” என்று தெரிவித்தார் ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ் தேவேந்திரன்.

21 நாட்கள் கழித்து அடுத்த மாதம் 19ஆம் தேதி அவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி போடப்படும்.

சுகாதார அமைச்சு, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு, ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு ஆகிய அமைப்புகள் இல்லத்தில் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கும் கொவிட்-19 கிருமித்தொற்று பரவல் நடவடிக்கைகளுக்கும் சிறந்த ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கியுள்ளதாக திரு தேவேந்திரன் குறிப்பிட்டார்.

“ஒருவர் ஆற்றும் செயல்கள் மற்றவர்களுக்கு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டும் என்பது ஸ்ரீ நாராயண குருவின் பாடங்களில் ஒன்று. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நம்மையும் சமூகத்தையும் பாதுகாக்கிறோம்,” என்றார் ஈசூனில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண மி‌‌‌ஷன் தலைவர் திரு ஜெயதேவ் உன்னித்தான்.

கடந்த ஓர் ஆண்டாக சிங்கப்பூரில் நிலவி வரும் கிருமித்தொற்றிலிருந்து இல்லத்தைப் பாதுகாக்க பல தியாகங்களை ஊழியர்கள் செய்துள்ளதையும் இல்லத்தில் ஒரு கிருமித்தொற்று சம்பவம்கூட ஏற்படவில்லை என்பதையும் திரு ஜெயதேவ் சுட்டினார்.

தடுப்பூசி போட்ட பின்னர், வலியோ, எந்த பக்க விளைவுகளோ ஏற்படவில்லை என்றார் 24 ஆண்டுகளாக இல்லத்தில் பணியாற்றும் திருமதி சரோஜா தேவி.

“சார்ஸ் கிருமித்தொற்றைவிட மிகக் கடுமையான சூழலை கொவிட்-19 ஏற்படுத்தியுள்ளது. எனினும் தற்போது, தொழில்நுட்பமும் மருத்துவ வசதியும் மேம்பட்டு மேலும் சீராக சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. அனைவரும் ஒத்துழைத்தால் விரைவில் வழக்கநிலைக்கு உலகம் திரும்பும் என்று நம்புகிறேன்,” என்றார் தடுப்பூசி போட்டுக்கொண்ட 40 ஆண்டுகளாக இல்லத்தில் மனிதவள பிரிவில் பணியாற்றும் திருமதி சுப்புலட்சுமி தர்மலிங்கம்.

அடுத்த மாதம் தடுப்பூசி குறித்து சமூக தலைவர்களை உள்ளடக்கிய சமூக கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இல்ல நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!