பெரிதாகி வரும் ‘கேடிவி’ கிருமித்தொற்றுக் குழுமம்

சமூ­கத்­தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது. இவர்­களில் எண்­மர், புதி­தாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள 'கேடிவி' கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­பட்­டது.

சமூ­கத்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட ஐவ­ருக்­கும், முன்­ன­தாக கண்­ட­றி­யப்­பட்ட கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கும் தொடர்பு இருப்­பது தெரிய வந்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

எஞ்­சி­ய­வர்­களில் 10 பேருக்­குத் தொடர்பு இருப்­பது கண்­கா­ணிப்பு முறை­யில் கண்­ட­றி­யப்­பட்­டது. நேற்று மாலை நில­வ­ரப்­படி, நான்கு பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தன் தொடர்பு ஏதும் இன்­னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

ஜூன் 17ஆம் தேதி­யன்று சமூ­கத்­தில் 20 பேருக்­குக் கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அதற்கு அடுத்த நிலை­யாக நேற்று ஆக அதி­க­மான சமூ­கத் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­விட்­டன.

சமூ­கத் தொற்­றுச் சம்­ப­வங்­களைத் தவிர, வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர் ஏழு பேருக்­கும் கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது.

இவர்­கள் சிங்­கப்­பூர் வந்­த­வுடன் இல்­லத் தனிமை உத்­த­ர­வின் கீழ் வைக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூரை அடைந்­த­தும் ஐவ­ரி­டம் கிருமி பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டது. இல்­லத் தனி­மை­யில் இருந்­த­போது எஞ்­சிய இரு­வ­ருக்­கும் கொவிட்-19 தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் ஏற்­பட்­டன.

நேற்­றைய 26 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளு­டன் சிங்­கப்­பூ­ரின் மொத்த தொற்று எண்­ணிக்கை 62,744ஐ எட்­டி­விட்­டது.

'கேடிவி' கிரு­மித்தொற்றுக் குழுமம்

உணவு, பான நிலை­யங்­க­ளாக தற்­போது செயல்­படும் 'கேடிவி' கூடங்­கள் அல்­லது மன­ம­கிழ் கூடங்­க­ளுக்கு வருகை தந்­தி­ருந்த வியட்­னா­மிய உப­ச­ரிப்­புப் பணி­யாளர்­கள் சிலர் தொடர்பான புதிய கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் ஒன்று உரு­வாகி இருப்­ப­தாக சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

இத­னால் 'சுப்­ரீம் கேடிவி' (ஃபார் ஈஸ்ட் கடைத்தொகுதி), 'எம்ப்­ரஸ் கேடிவி' (தங்­ளின் கடைத்தொகுதி), 'கிளப் டொல்ச்' (பாலஸ்­டி­யர் பாயிண்ட்) ஆகிய இடங்­களில் சிறப்­புப் பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பி­டப்­பட்ட மூன்று 'கேடிவி' கூடங்­க­ளுக்கோ அது போன்று செயல்­படும் வேறு நிலை­யங்­கள் அல்­லது மன­ம­கிழ் கூடங்களுக்கோ ஜூன் 29க்கும் இம்­மா­தம் 12க்கும் இடைப்­பட்ட காலத்­தில் சென்­ற­வர்கள் மற்­றும் வியட்­னா­மிய உப­ச­ரிப்­புப் பணி­யா­ளர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் இல­வச கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

திங்­கட்­கி­ழமை புதி­தாக இரண்டு கிரு­மித்­தொற்று குழு­மங்­கள் குறித்து அறி­விக்­கப்­பட்­டது.

பாலஸ்­டி­யர் பாயிண்ட் கேடிவி கூடம் தொடர்ந்து செயல்­படும்

பாலஸ்­டி­யர் பாயிண்­டில் செயல்­படும் 'கிளப் டொல்ச்' மன­ம­கிழ் கூடத்­தின் ஊழி­யர்­கள் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­கள் என்­றா­லும் அந்த நிலை­யம் தொடர்ந்து செயல்­படும் என்று அதன் உரி­மை­யா­ளர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டுள்­ளது.

சுகா­தார அமைச்சு அமல்­ப­டுத்­தும் சிறப்பு கொவிட்-19 பரி­சோ­தனை ஏற்­பாட்­டின்­கீழ் தன் ஊழி­யர்களைச் சோத­னைக்கு அனுப்­ப­வேண்­டும் என்று அமைச்சு தன்­னி­டம் கூறியதாக டேரன் பே என்ற அக்­கூ­டத்­தின் உரி­மை­யா­ளர் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும் தமது கேடிவி கூடத்தை மூடு­மாறு அதி­கா­ரி­கள் இது­வரை உத்­த­ர­விடவில்லை என்­றும் குறிப்­பிட்­டார்.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர் வாடிக்­கை­யா­ளர் வரு­கைக்­காக கூடம் திறக்கப்பட்டதாக அங்குள்ள கடைக்­கா­ரர்­களும் வட்­டா­ர­வா­சி­களும் கூறி­னர். இந்நிலையில் சுத்தம் செய்யும் பணிகளுக்காக நேற்று கூடம் மூடப்பட்டது.

இதற்கிடையே எம்ப்­ரஸ் கேடி­வி கூடத்­திற்­குப் பிற்­ப­கல் வாக்­கில் உப­ச­ரிப்­புப் பணி­யா­ளர்­கள் வரு­வதைப் பார்த்­தி­ருப்­ப­தா­க­வும் பெரும்­பா­லும் ஐவர் கொண்ட குழுக்­க­ளாக அவர்­கள் வரு­வ­தா­க­வும் கூடத்தின் பக்­கத்­தில் அமைந்­துள்ள 'மேத் விஷன்' வள­மூட்டு நிலை­யத்­தின் பிரி­வுத் தலை­வர் திரு விநா­யக் மோர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறி­னார்.

"குட்­டைப் பாவா­டை­களில் இளம்­பெண்­கள் குழுக்­க­ளாக வரு­வதை நாங்­கள் பார்த்திருக்கிறோம். பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­கள் தின­மும் நான்கு முறை­யா­வது இங்கு வந்­து போனாலும் மாலை­ வேளையில் கேடிவி திறக்­கும்­போது தூதர்கள் அங்கு இருப்­ப­தில்லை," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!