கேடிவி குழுமம் 54 பேராக ஆனது

புதிதாக 60 பேர் பாதிப்பு; சமூகத்தில் 56 பேருக்குக் கிருமித்தொற்று; 41 பேருக்கு கேடிவி தொடர்பு

சிங்­கப் ­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 60 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னார்­கள். சமூ­கத்­தில் புதி­தாக பாதிக்­கப்பட்ட 56 பேர் அவர்­களில் அடங்­கு­வர். சமூ­க பாதிப்­புக்கு ஆளா­ன­வர்­களில் 41 பேர் கேடிவி தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். அவர்களில் டிரீம் குரூய்சஸ் உல்லாச கப்பலில் இருந்த 40 வயது பயணியும் ஒருவர்.

வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்­தி­றங்­கிய நான்கு பேருக்கு தொற்று இருந்­தது தெரி­ய­வந்­தது. அவர்­க­ளுக்கு தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

உள்­ளூ­ரில் கிருமித்தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 17 பேர் முந்­தைய நோயா­ளி­களுடன் தொடர்­பு­டை­ய­வர்­கள். அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு இருந்­தார்­கள். 33 பேர் முந்­தைய கொவிட்-19 நோயா­ளி­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். வழக்­க­மான கண்­கா­ணிப்­பின் மூலம் அவர்­க­ளுக்கு தொற்று இருந்­தது தெரி­ய­வந்­தது.

புதி­தாக கிருமி தொற்­றி­ய­வர்­களில் ஆறு பேருக்கு தொற்று எப்­படி ஏற்­பட்­டது என்­பது தெரி­ய­வில்லை.

நேற்று புதி­தாக கிருமி தொற்­றி­ய­வர்­களை­யும் சேர்த்து கேடிவி குழு­மத்­தொற்றின் அளவு 54 பேராகி இருக்­கிறது. இந்தத் தொற்­றுக் குழு­மம் சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய குழு­மங்­களில் ஒன்­றாகி உள்ளது.

இத­னி­டையே, இந்த நில­வ­ரம், கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு இருப்­பதை பாதிக்குமா என்­பது பற்றி கருத்­து­ரைத்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், இது பற்றி ஆழ­மாக விவா­தித்­த­தா­க­வும் இப்­போது தடுப்­பூசி போட்டுக்கொண்டோர் விகி­தம் மிக­வும் அதி­க­மாக இருப்­ப­தால் கட்­டுப்­பாடு­கள் தளர்த்­தப்­பட்டு இருப்­பதில் மாற்­ற­மிராது என்றும் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் முன்­பை­விட இப்­போது அதிக மீள்­தி­ற­னு­டன் திகழ்­கிறது. மக்­கள்­தொகை யில் 70%க்கும் அதி­க­மா­ன­வர்கள் முதல் தடுப்பூசி­யைப் போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள். 40%க்கும் அதி­க­மா­ன­வர்­கள் இரு தடுப்பூசிகளையும் போட்­டுக்­கொண்டு உள்­ள­னர் என்­பதை நேற்று செய்­தி­யா­ளர்­களி­டம் பேசி­ய­போது அவர் எடுத்­துக் கூறி­னார்.

கேடிவி குழு­மத் தொற்று ஏமாற்­றம் தரு­வ­தாக குறிப்­பிட்ட அவர், இருந்­தா­லும் இது முற்­றி­லும் தனக்கு வியப்­ப­ளிக்­க­வில்லை என்­றார். உரு­மா­றிய டெல்டா கிருமி வேக­மாக பர­வக்­கூ­டி­யது என்­பதை அவர் சுட்­டி­னார்.

கேடிவி மன­ம­கிழ் கூடங்­கள், இரவு நேர விடு­தி­க­ளுக்­குச் சென்­றி­ருப்­ப­வர்­கள், அங்கு பணி­பு­ரிந்த உப­ச­ரிப்­பா­ளர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும் என்று அமைச்­சர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

கேடிவி கூடங்­க­ளுக்கு எதிரா­க­வும் அந்த உப­ச­ரிப்­பா­ளர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் போலிஸ் நட­வ­டிக்கை எடுக்கும் என்­றாரவர்.

இத­னி­டையே, சுப்­ரீம் கேடிவி (ஃபார் ஈஸ்ட் கடைத்­தொ­குதி), எம்­பி­ரஸ் கேடிவி (தங்­ளின் கடைத்­தொ­குதி), கிளப் டோல்சி (பாலஸ்­டி­யர் பாயிண்ட்), டபிள்­யுயூ பிஸ்ட்ரோ பிரை­வேட் லிமிடெட் (கோல்­டன் மைல் காம்ப்­ளக்ஸ்), கிளப் டி சாரா பிரை­வேட் லிமிடெட் (டெக்ஸ்­டைல்ஸ் சென்­டர்) ஆகி­ய­வற்­றுக்கு ஜூன் 29ஆம் தேதிக்­கும் ஜூலை 13ஆம் தேதிக்­கும் இடை­யில் யாரே­னும் சென்று வந்­தி­ருந்­தால் அவர்­கள் இல­வச பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும் என சுகா­தார அமைச்சு கூறி இருக்­கிறது.

உணவு, பான நிலை­ய­மா­கச் செயல்­படும் கேடிவி கூடங்­கள் அல்­லது மன­ம­கிழ் நிலை­யங்­க­ளுக்­குச் சென்று வந்­தி­ருப்­போ­ரும் அந்­தக் கூடங்­களில் பணி­பு­ரிந்த வியட்னா­மிய உப­ச­ரிப்­பா­ளர்­க­ளு­டன் கலந்­து­ற­வாடி இருப்­போரும் பரி­சோ­தனை செய்துகொள்ள வேண்­டுமென அமைச்சு கூறி­யது.

இந்த நிலை­யங்­க­ளுக்­குச் சென்று வந்­தி­ருப்­போர், இரு வாரங்­க­ளுக்கு தங்­கள் உடல்­நி­லையைக் கண்­கா­ணித்து வர வேண்டும். யாருக்­கா­வது கொவிட்-19 அறிகுறி தெரிந்­தால் அவர்­கள் உடனே மருத்­து­வரைப் பார்க்க வேண்­டும்.

கொவிட்-19 தொற்றுள்ளவர்க­ளு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருந்­த­வர்­கள் தட­மறி­தல் மூலம் அடை­யா­ளம் காணப்­பட்டு உள்ளதாகவும் அமைச்சு தெரி­வித்­தது.

வியட்னாமிய பயணியே முதல் நபர்

கேடிவி கொவிட்-19 தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டைய முத­லா­வது நபர் வியட்­னா­மில் இருந்து குறு­கி­ய­கால விசா­வில் இங்கு வந்த ஒரு பெண் என்று சிங்­கப்­பூ­ரின் மருத்­துவச் சேவைத் துறை இயக்­கு­நர் கென்­னத் மாக் நேற்று செய்தியாளர்களிடம் தெரி­வித்­தார்.

சுவா­சப் பிரச்­சினை கார­ண­மாக அந்த மாது ஜூலை 11ஆம் தேதி பொது மருத்து­வ­ரி­டம் சென்ற போது கொவிட்-19 தொற்று இருந்­தது தெரி­ய­ வந்­த­தால் உடனே அவர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­பட்­டார்.

அவர் பல கேடிவி கூடங்­க­ளுக்கு அடிக்­கடி சென்று வந்­தி­ருக்­கி­றார் என்பது தெரி­ய­வந்­தது. பிறகு தட­ம­றி­தல் மூலம் இதர பல­ருக்­கும் தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!