அதிகமான ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனைகள்

தொற்று அதிவேகமாகப் பரவுவதைத் தடுக்க புதிய நடவடிக்கைகளை அறிவித்த சுகாதார அமைச்சு

கொவிட்-19 தொற்று அதி­வே­க­மாக அதி­க­ரிப்­ப­தைத் தடுக்க, கூடு­த­லானோ­ருக்கு அடிக்­க­டி பரி­சோ­த­னை­கள் செய்­வது, கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை அதி­க­ரிப்­பது உள்­ளிட்ட புதிய கிரு­மிக் கட்­டுப்­பாடு நட­ வ­டிக்­கை­களை அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

ஒரு வாரத்­தில் தொற்று எண் ணிக்கை இரட்­டிப்­பா­ன­தைத் தொடர்ந்து இந்த நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படுகின்றன. கடந்த வாரம் 1,200 பேருக்கு கிருமி தொற்­றி­யது. ஒப்­பு­நோக்க அதற்­கும் முந்­தைய வாரம் 600 பேருக்கு தொற்று ஏற்­பட்­டி­ருந்­தது.

புதிய நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக, இன்­னும் அதி­க­மான துறை­களில் ஊழி­யர்­க­ளுக்கு விரை­வு சுயபரி­சோ­த­னை­கள் கட்­டா­ய­மாக்­கப்­படும். இது பட்­டி­ய­லிட்ட அட்டவணை முறை­யில் நடை­பெறும்.

கொவிட்-19 கிருமி எதிர்ப்­புக்­கான அமைச்­சு­கள் நிலைப் பணிக்­குழு நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நிதி அமைச்­ச­ரும் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு லாரன்ஸ் வோங் இதைத் தெரி­வித்­தார்.

தற்­போது, உணவு, பான விடு­தி­கள், தனிப்­பட்ட பரா­ம­ரிப்­புச் சேவை­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள் போன்ற அதி­க தொற்று அபா­யம் உள்ள இடங்­களில் பணியாற்றும் ஊழி­யர்­கள் மட்­டுமே இத்­த­கைய பரி­சோ­த­னை­க­ளுக்­குச் செல்ல வேண்­டும்.

இனி, கடைத்­தொ­குதி ஊழி­யர்­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் பொருட்­க­ளை­யும் உண­வை­யும் விநி­யோ­கித்து ஒப்­ப­டைக்­கும் ஊழி­யர்­கள், பேருந்து ஓட்­டு­நர்­கள் போன்ற பொதுப் போக்­கு­வ­ரத்து முன்­கள ஊழி­யர்­கள், தனி­யார் கார் ஓட்­டு­நர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு விரை­வுப் பரி­சோ­த­னை­கள் கட்­டா­ய­மாக்­கப்­படும்.

முன்­ன­தாக இரு வாரத்­துக்கு ஒருமுறை நடத்­தப்­பட்ட இந்த விரை­வுப் பரி­சோ­த­னை­கள் இனி வாரம் ஒருமுறை நடை­பெ­றும் என்று திரு வோங் கூறி­னார்.

தற்­போ­துள்ள நடை­மு­றை­போல முத­லா­ளி­கள், ஊழி­யர்­க­ளுக்­கான இந்த சுய­ப­ரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வார்­கள். இந்த மேம்­பட்ட திட்­டத்­தின் கீழ், தடுப்­பூசி போட்­டுக் கொண்ட ஊழி­யர்­க­ளுக்­கும் அதைப் போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­க­ளுக்­கும் பரி­சோ­த­னை­க­ளுக்கு ஆகும் செல­வுக்­கான கட்­ட­ணத்­தின் ஒரு பகு­தியை அர­சாங்­கம் ஏற்­றுக் கொள்­ளும்.

இந்­தப் பரி­சோ­த­னைத் திட்­டம் பற்­றிய மேல்­வி­வ­ரங்­கள் பின்­னர் அறி­விக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

சுகா­தார அபாய எச்­ச­ரிக்­கை­கள்

மேலும், புதிய தொற்­றுக் குழு­மங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டும்­போது, தொற்­றுள்­ள­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­க­ளுக்கு சுகா­தார அபாய எச்­ச­ரிக்­கை­க­ளை­யும் அறி­விப்­பு­க­ளை­யும் அர­சாங்­கம் அனுப்­பும். தொற்­றுக்­கு­ழு­மங்­களை விரை­வில் கட்­டுப்­ப­டுத்­து­வது இதன் நோக்­கம் என்­றது அமைச்சு.

இந்த எச்­ச­ரிக்­கை­கள், இல்­லத் தனிமை உத்­த­ர­வு­கள் அல்ல.

எனி­னும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு எச்­ச­ரிக்­கை­க­ளைப் பெறு­வோர் சட்­டப்­படி ‘பிசி­ஆர்’ பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொண்டு, முதல் பரி­சோ­த­னை­யின் முடிவு வரும் வரை தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். பின்­னர் அவர்­கள் ஏஆர்டி எனும் விரை­வுப் பரி­சோ­த­னை­யை­யும் 14ஆம் நாளில் மீண்­டும் பிசி­ஆர் கிரு­மிப் பரி­சோ­த­னை­யை­யும் செய்­து­கொள்ள வேண்­டும் என்­றார் திரு வோங்.

சுகா­தார அபாய எச்­ச­ரிக்­கை­க­ளை­யும் சுகா­தார அறி­விப்­பு­க­ளை­யும் பெறு­ப­வர்­கள் மற்­ற­வர்­க­ளு­டன் நெருக்­க­மாக இருப்­பதை 14 நாட் களுக்கு நிறுத்­திக்­கொள்ள வேண்­டும்.

கூடு­தல் கட்­டுப்­பா­டு­க­ளையோ கிருமி எதிர்ப்பு நட­வ­டிக்கை களையோ மேற்­கொள்­ளா­மல் தொற்­றுப் பர­வ­லைக் குறைக்க இந்த நட­வ­டிக்­கை­கள் உத­வும் என்று அமைச்­சர் கூறி­னார்

இங்கு அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டி­ருப்­ப­தால்­தான் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மத்­தி­யில் கடும் நோயை­யும் மர­ணங்­க­ளை­யும் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க முடிந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார். ஆனால் தடுப்­பூசி போடா­த­வர்­க­ளுக்கு தொற்று அபா­யம் தொடர்­கிறது.

“அத­னால் தொற்று அதி­வே­க­மாவதைத் தடுக்க இப்­போதே துரித நட­வ­டிக்கை எடுப்­பது அவசியம்,” என்­றார் திரு வோங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!