அதிகபட்சம் இருவர் சேர்ந்து உண்ணலாம்

சமூக ஒன்றுகூடலில் இடம்பெறுவோர் வரம்பு ஐவரில் இருந்து குறைப்பு

வெகு­வே­க­மாக உயர்ந்து வரும் கொவிட்-19 பர­வ­லைக் கட்­டுப்­படுத்த சிங்­கப்­பூர் தனது கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­கி­யுள்­ளது.

அதன்­படி, சமூகத்தில் ஒன்­று­கூடுவோர்க்கும் உணவகங்களில் சேர்ந்து உண்போர்க்குமான வரம்பு இப்­போது ஐவ­ராக இருக்­கும் நிலை­யில், அது இரு­வ­ரா­கக் குறைக்­கப்­ப­டு­கிறது. இந்­தக் கட்­டுப்­பாடு 27ஆம் தேதி திங்­கட்­கி­ழ­மை­யிலிருந்து நடப்­பிற்கு வரும்­.

புதிய கட்­டுப்­பா­டு­கள் ஒரு மாத காலத்­திற்கு நீடித்­தி­ருக்­கும். அடுத்த மாதம் 25ஆம் தேதி கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும். அதே வேளை­யில், இரு வாரங்­க­ளுக்­குப் பின் நிலைமை மறு­ஆய்வு செய்­யப்­பட்டு, சமூ­கத்­தில் கிரு­மிப் பர­வ­லைப் பொறுத்து, அதற்­கேற்ப கட்­டுப்­பா­டு­களில் மாற்­றங்­கள் அறி­விக்­கப்­ப­ட­லாம்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அமைப்­பைப் பெரும் நெருக்­க­டிக்கு உள்­ளாக்­கா­மல் இருக்க, கொரோனா பர­வ­லைத் தடுக்க இந்­தக் கடி­ன­மான முடிவு அவ­சி­ய­மா­னது என்­றும் வீட்­டி­லி­ருந்­த­படி குண­ம­டை­தல் மற்­றும் இல்­லப் பரா­ம­ரிப்பு சேவை­களை அதி­க­ரிக்க கால அவ­கா­சம் தேவை என்­றும் வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கின் யோங் நேற்று தெரி­வித்­தார்.

"இந்த அறி­விப்­பால் பல சிங்­கப்­பூ­ரர்­களும் வர்த்­த­கங்­களும் ஏமாற்­ற­ம­டை­வர் என்­பதை அறிந்­துள்­ளேன். ஆயினும், கட்­டுப்­பாடு­க­ளைத் தளர்த்தி, பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொடங்­கு­வ­தில் சிங்­கப்­பூர் கடப்­பாடு கொண்­டுள்­ளது என்று உறு­தி­யா­கக் கூற விரும்­பு­கி­றேன்," என்று கொவிட்-19 தொற்­றுக்­கு எ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வரு­மான திரு கான் சொன்­னார்.

"இந்­தப் பய­ணம் நீண்­ட­தாக இருக்­க­லாம். அதன்­மூ­லமே, மறு­தி­றப்பை நாம் பாது­காப்­பா­கச் செய்ய முடி­யும். இப்­போ­தைய கொரோனா அலை­யில் இருந்­தும் எதிர்­கா­லத் தொற்­று­க­ளை­யும் கடந்துவர இப்­ப­டிச் சில மாற்­றங்­களைச் செய்­யும் வேளை­யில், பொது­மக்­கள் பொறு­மைகாத்து, ஆத­ர­வ­ளிக்க வேண்­டு­கி­றோம்," என்று திரு கான் கேட்­டுக்­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரில் நேற்று முன்­தி­னம் புதி­தாக கிட்­டத்­தட்ட 1,500 பேர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். இதே நிலை தொடர்ந்­தால், அடுத்த வாரத்­தில் அன்­றாட பாதிப்பு 3,000ஐ எட்­டக்­கூ­டும்.

இந்­நி­லை­யில், நாளொன்­றுக்கு 5,000 புதிய பாதிப்­பு­களை எதிர்­கொள்ள முடி­யும் வகை­யில் சிங்­கப்­பூர் தனது திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­கிறது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்­றைய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது தெரி­வித்­தார்.

$650 மில்­லி­யன் ஆத­ர­வுத் திட்­டம்

இவ்வேளையில், வேலை ஆத­ர­வுத் திட்ட மானி­யங்­கள், டாக்சி, தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளுக்­கான வாட­கைத் தள்­ளு­ப­டி­கள், உத­வி­கள் என $650 மில்­லி­யன் ஆத­ர­வுத் திட்­டத்தை நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் அறி­வித்­துள்­ளார். அண்­மைய கட்­டுப்­பா­டு­களால் பாதிக்­கப்­படும் வர்த்­த­கங்­களுக்கு உத­வும் நோக்­கில் இத் திட்­டம் அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

இதற்­காக கையி­ருப்பு நிதி­யில் இருந்து பணம் பெறப்­ப­டாது.

இத­னி­டையே, அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் புதிய அறி­விப்­பு­கள், கொவிட்-19 மீள்­திறன்கொண்ட நாடு என்ற பாது­காப்­பான நிலையை சிங்­கப்­பூர் எட்ட உத­வும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"முத­லா­வ­தாக, நமது சுகா­தாரப் பரா­ம­ரிப்பு அமைப்­பின் கொள்­தி­ற­னைப் பாது­காத்து வரு­கி­றோம். அடுத்து, முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட கொவிட்-19 நோயா­ளி­கள் வீட்­டி­லேயே குணம் அடை­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அதி­க­ரித்து வரு­கி­றோம். அம்­மு­யற்­சி­களில் சுகா­தார அமைச்­சிற்கு சிங்­கப்­பூர் ஆயு­தப் படை கைகொ­டுத்து வரு­கிறது. இறு­தி­யாக, புதிய கட்­டுப்­பா­டு­க­ளால் பாதிக்­கப்­படும் வர்த்­த­கங்­க­ளுக்கு ஆத­ர­வளிக்­கிறோம்," என்று பிர­த­மர் கூறியுள்ளார்.

சமூக சிகிச்சை வளா­கங்­களில் அதி­க­மான கொவிட்-19 நோயாளி­களை அனுமதிப்பதன்­மூ­லம் மோச­மாக பாதிக்­கப்­படுவோர்க்காக மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­களைத் தயார்­நி­லை­யில் வைத்­து இ­ருக்க முடி­யும் என்­றார் அவர்.

'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­ போடவும் இன்­னும் தடுப்­பூசி போடா­தோர்க்­குத் தடுப்­பூசி போட­வும் புதிய நட­வ­டிக்­கை­கள் கூடு­தல் கால அவ­கா­சம் அளிக்­கும் என்று திரு லீ குறிப்­பிட்டார். நமது மருத்­து­வ­மனை­க­ளின் கொள்­தி­ற­னை­யும் அதி­க­ரித்து வரு­வ­தாக அவர் தெரி­வித்து இருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!