தமிழகம்: கொரோனா ஒழிய தடுப்பூசி இயக்கம், ஓராண்டுக்கு விதிகள்

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­பட்­டா­லும் மேலும் ஓராண்டு காலத்­திற்கு கொரோனா விதி­களை மக்­கள் பின்­பற்ற வேண்­டிய தேவை இருக்குமென சுகா­தார அமைச்சர் மா சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.

மாநி­லத்­தில் இப்­போது தொற்று கட்­டுப்­பட்டு இருப்­ப­தா­க­வும் இருந்­தா­லும் பண்­டி­கை­கள் வரு­வ­தால் அடுத்த நான்கு முதல் ஆறு வார காலம் மிகவும் எச்­ச­ரிக்­கை­யாக இருந்துகொள்­ள­வேண்­டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

தமிழ்­நாட்­டில் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­கள் பற்றி அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்­தித்­தா­ளுக்­குப் பேட்டி அளித்­தார். அந்­தப் பேட்டி நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

தமி­ழ­கத்­தில் குறைந்­த­பட்­சம் அடுத்த ஓராண்டு காலத்­திற்கு கொவிட்-19 விதி­க­ளை மக்­கள் பின்­பற்றி நடந்­து­கொள்­ள­வேண்டி இருக்­கும் என்றார் அமைச்­சர்.

அமெ­ரிக்கா, பிரிட்­டன், ரஷ்யா, சீனா போன்ற வள­ர்ந்த நாடு­களில் மறு­ப­டி­யும் தொற்று தலை எடுப்­பதைச் சுட்­டிய அமைச்­சர், தமிழ்­நாட்­டில் மறு­ப­டி­யும் தொற்று தீவி­ர­மாகத் தலை­தூக்­காது என்­ப­தற்கு உத்­த­ர­வா­தம் இல்லை என்­றார்.

இரண்டாவதாக, கொரோனா வைத் துடைத்து ஒழிக்க மாநி­லத்­தில் தடுப்­பூசி செயல்­திட்­டத்தைத் தொடர வேண்­டிய தேவை இருப்­பதை உணர்ந்து அதை அரசாங்­கம் தீவி­ர­மாக கையில் எடுப்­ப­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

மக்­கள்தொகை­யில் 70%க்கு குறைந்­த­பட்­சம் ஒரு தடுப்­பூ­சி­யைப் போட்­டு­விட்­டால் கொரோனா 3வது அலை­யைத் தவிர்த்­து­வி­ட­லாம் என்று இந்­திய மருத்­துவ ஆய்வு மன்­றம் தெரி­வித்துள்ளதைச் சுட்­டிய அமைச்­சர், தமி­ழ­கத்­தில் தடுப்­பூசி போட்டுக்­கொள்ள தகு­தி­பெற்­றுள்ள 50.8 மில்­லி­யன் (5.8 கோடி) மக்­களில் 69 விழுக்­காட்டினர் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொண்டு உள்­ள­தாகத் தெரி­வித்­தார்.

மக்­கள்­தொ­கை­யில் இதுவரை 29 விழுக்­காட்டினர் முழு­வது­மாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு உள்­ள­தாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இது இந்­தியா முழு­வ­தற்­கு­மான தேசிய அள­வை­விட (31%) சற்றுக் குறைவு என்ற அமைச்­சர், என்­றா­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர்க்கு ரேஷன் பொருள்கள் கிடைக்காது என்பது போன்ற தடை எதையும் விதிக்­கும் எண்­ணம் இல்லை என்­றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!